திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவில் ஐப்பசி திருவிழாவின் 10-ம் நாள் இரவு, ஆதிகேசவப்பெருமாளும் கிருஷ்ணசாமியும் மேற்கு வாசல் வழியாக ஆராட்டுக்கு புறப்பட்டனர். போலீசார் மரியாதையுடன் திருவிதாங்கூர் மன்னரின் பிரதிநிதி உடைவாளுடன் முன் செல்ல, பக்தர்கள் புடைசூழ சுவாமி ஊர்வலம் தளியல் ஆற்றை அடைந்தது. அங்கு கோகுல் தந்திரி விஷேஷ பூஜைகளை நடத்தினார். தொடர்ந்து ஆற்றில் ஆராட்டு நடைபெற்றது. பக்தர்கள் சுவாமிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
 
            

