ஆர்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் செயற்குழு கூட்டம் மத்தியப் பிரதேசம் ஜபல்பூரில் நேற்று தொடங்கியது.
ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்து 101-ம் ஆண்டுக்குள் நுழைந்துள்ளது. இந்நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் செயற்குழு கூட்டம் மத்தியப் பிரதேசம் ஜபல்பூரில் நேற்று தொடங்கியது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே ஆகியோர் இந்த கூட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இதில் நாடு முழுவதிலும் இருந்து 407 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு கொண்டாட்டம் குறித்து இதில் ஆலோசிக்கப்படும். மேலும், நாடு முழுவதும் 1 லட்சம் இந்து மாநாடுகளை நடத்துவது குறித்தும் இதில் ஆலோசிக்கப்படவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
            

