ஐசிசி மகளிர் உலகக் கோப்பை அரை இறுதியில் இந்தியா – ஆஸி. இன்று பலப்பரீட்சை

0
25

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நவி​மும்​பை​யில் உள்ள டி.ஒய்​.​பாட்​டீல் மைதானத்​தில் இன்று பிற்​பகல் 3 மணிக்கு நடை​பெறும் 2-வது அரை இறுதி ஆட்​டத்​தில் இந்​திய அணி, 7 முறை சாம்​பிய​னான ஆஸ்​திரேலி​யா​வுடன் மோதுகிறது.

இந்​திய அணி அரை இறு​திக்கு போராடியே தகுதி பெற்​றிருந்​தது. முதல் 2 ஆட்​டங்​களில் வெற்றி பெற்று தொடரை சிறப்​பாக தொடங்​கிய இந்​திய அணி அதன் பின்​னர் ஹாட்​ரிக் தோல்வி அடைந்து பின்​னடைவை சந்​தித்​தது. இதன் பின்​னர் நியூஸிலாந்து அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் ஸ்மிருதி மந்​த​னா, பிர​திகா ராவல் ஆகியோர் விளாசிய சதம் மற்​றும் பந்​து​வீச்​சில் காட்​டிய கட்​டுக்​கோப்​பான திற​னால் இந்​திய அணி வெற்​றியை வசப்​படுத்தி அரை இறு​தி​யில் கடைசி அணி​யாக நுழைந்​தது.

சிறந்த பார்​மில் இருந்த பிர​திகா ராவல், வங்​கதேச அணிக்கு எதி​ரான கடைசி லீக் ஆட்​டத்​தில் பீல்​டிங்​கின் போது காயம் அடைந்​த​தால் தொடரில் இருந்து வில​கி​னார். அவருக்கு பதிலாக சேர்க்​கப்​பட்​டுள்ள ஷபாலி வர்​மா, மந்​த​னா​வுடன் தொடக்க வீராங்​க​னை​யாக களமிறங்​கக்​கூடும். அல்​லது ஹர்​லின் தியோல் மந்​த​னா​வுடன் இணைந்து இன்​னிங்ஸை தொடங்க வாய்ப்​புள்​ளது.

கடந்த 2017-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்​டத்​தில் ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ராக ஹர்​மன்​பிரீத் கவுர் 115 பந்​துகளில் 171 ரன்​கள் விளாசி அணி​யின் வெற்​றி​யில் முக்​கிய பங்கு வகித்​திருந்​தார். இதே​போன்ற செயல் திறனை மீண்​டும் ஒரு முறை வெளிப்​படுத்த ஹர்​மன்​பிரீத் கவுர் முயற்​சிக்​கக்​கூடும். விரலில் ஏற்​பட்ட காயம் காரண​மாக கடந்த ஆட்​டத்​தில் ஓய்வு கொடுக்​கப்​பட்​டிருந்த ரிச்சா கோஷ் காயத்​தில் இருந்து குணமடைந்​துள்​ள​தால் அணி​யில் இடம் பெறக்​கூடும்.

ஆஸ்​திரேலிய அணி​யில் கேப்​டன் அலிசா ஹீலி காயம் காரண​மாக கடந்த இரு ஆட்​டங்​களில் பங்​கேற்​க​வில்​லை. உடற்​தகு​தியை பெறும் வகை​யில் நேற்று அவர், பயிற்​சிகளை மேற்​கொண்​டார். அலிசா ஹீலி களமிறங்​கும் பட்​சத்​தில் ஆஸ்​திரேலிய அணி​யின் பலம் மேலும் அதி​கரிக்​கக்​கூடும். நடப்பு தொடரில் அவர், 2 சதங்​கள் விளாசி​யிருந்​தார்.

வங்​கதேச அணிக்கு எதி​ராக 84 ரன்​கள் விளாசிய ஃபோப் லிட்ச்ஃபீல்ட், 2 சதங்​கள் மற்​றும் 7 விக்​கெட்​கள் வீழ்த்​தி​யுள்ள ஆஷ்லே கார்ட்​னர், 114 ரன்​களு​டன் 15 விக்​கெட்​கள் வேட்​டை​யாடி உள்ள அனாபெல் சுதர்​லேண்ட், 13 விக்​கெட்​கள் கைப்​பற்​றி​யுள்ள அலானா கிங் ஆகியோ​ரும் பலம்​ சேர்க்​கக்​கூடியவர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here