கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நேசமணி போலீசார் நேற்று ராமன்புதூரில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, கலைநகர் பகுதியைச் சேர்ந்த சுனில் (35) என்பவர் மோட்டார் சைக்கிளில் புகையிலை விற்பனை செய்துகொண்டிருந்ததைக் கண்டறிந்தனர். அவரைப் பிடித்து விசாரித்ததில், அவரிடமிருந்து 25 பாக்கெட் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், சுனிலை போலீசார் கைது செய்தனர்.














