ஆந்திராவை புரட்டிப் போட்ட மோந்தா புயல்: ஹெலிகாப்டரில் ஆய்வு செய்த முதல்வர் சந்திரபாபு நாயுடு

0
18

மோந்​தா புயல் ஆந்​தி​ராவை புரட்டி போட்​டுள்​ளது. புய​லால் பாதிக்​கப்​பட்ட பகு​தி​களை ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு ஹெலிகாப்டரில் சென்​று ஆய்வு செய்​தார். வங்க கடலில் மையம் கொண்​டிருந்த மோந்தா புயல் செவ்​வாய்க்கிழமை நள்​ளிரவு காக்​கி​நாடா – மசூலிப்​பட்​டினம் இடையே கரையை கடந்தது.

அப்போது சுமார் 100 முதல் 110 கி.மீ வேகத்​தில் சூறாவளி காற்​றுடன் கனமழை பெய்​தது. கோனசீ​மா, விசாகப்​பட்​டினம், விஜயநகரம், அம்​பேத்கார், ஸ்ரீகாகுளம், பிர​காசம், கிருஷ்ணா, நெல்​லூர், கோதாவரி மாவட்​டங்​கள் அதி​க​மாக பாதிக்கப்பட்டுள்ளன.

புயல் காரணமாக பல வீடு​கள் நாசமடைந்​தன. மின் கம்​பங்​கள், மரங்​கள் சாய்ந்​தன. பல கிராமங்​கள் தண்​ணீ​ரால் சூழப்​பட்​டன. மின்​சா​ரம் துண்​டிக்​கப்​பட்​ட​தால் பல கிராமங்​கள், நகரங்​கள் இருளில் மூழ்​கின. கோனசீமா மாவட்​டத்​தில் மரம் விழுந்​த​தில் 2 பெண்​கள் உயி​ரிழந்​தனர். நூற்​றுக்​கணக்​கான கால்​நடைகள் உயி​ரிழந்​தன. பல ஆயிரம் ஏக்​கர் நெல், பருத்​தி, மிள​காய், வாழை, பப்​பாளி, தென்னை மரங்​கள் அழிந்​தன. இதனால் விவ​சா​யிகள் மிக​வும் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.

உயிர் சேதத்தை விட அதி​க​மாக பொருட்​சேதத்தை இந்த மோந்தா புயல் ஏற்​படுத்தி விட்​டது. ஆந்​தி​ரா​வில் மோந்தா புய​லால் 249 மண்​டலங்​கள், 48 நகராட்​சிகள், 18 லட்​சம் பேர் பாதிக்​கப்​பட்​ட​தாக ஆந்​திர அரசு, மத்​திய அரசிடம் தெரியப்​படுத்தி உள்​ளது. இந்​நிலை​யில் நேற்​று, ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு அமராவ​தி​யில் காணொலி மூலம் புயல் பாதிக்​கப்​பட்ட மாவட்ட ஆட்​சி​யர்​கள் மற்​றும் அரசு உயர் அதி​காரி​களு​டன் ஆலோ​சனை நடத்​தி​னார்.

அப்​போது அவர் பேசும்​போது, ‘‘புய​லால் பாதிக்​கப்​பட்ட இடங்​களில் அமைச்​சர்​கள், அதி​காரி​கள், எம்​.எல்​.ஏக்​கள், எம்​பிக்​கள் நேரில் சென்று பார்​வை​யிட்​டு, அங்​குள்ள மக்​களுக்கு ஆறு​தல் கூற வேண்​டும். எங்​கள் அரசு உங்​களுக்கு தேவை​யான அனைத்​தை​யும் செய்து தரும் என்​னும் நம்​பிக்கை அவர்​களுக்கு வரு​மாறு எடுத்​துரைக்க வேண்​டும்.

ரூ.1000 நிதியுதவி: வீடு, வாசல் இழந்த மக்​களுக்கு உறு​துணை​யாக நிற்க வேண்​டும். அரசு தரப்​பில் அவர்​களுக்கு அத்​தி​யா​வசிய பொருட்​களை வழங்​க வேண்​டும். முகாம்​களில் தங்கி உள்ள ஒவ்​வொரு​வருக்​கும் தலா ரூ.1,000 வீதம் நிதி உதவி வழங்​கி, அவர​வர் வீடு​களுக்கு அனுப்பி வைக்​க வேண்​டும்.

அதி​கபட்​ச​மாக குடும்​பத்​துக்கு ரூ. 3 ஆயிரம் வீதம் வழங்​குங்​கள். புயல் வரு​வதை நாம் தடுக்க முடி​யாது. ஆனால், முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளால் நாம் அதன் பாதிப்பை குறைத்து கொள்ள முடி​யும். தற்​போது மோந்தா புய​லால் 2 பெண்​கள் உயி​ரிழந்​துள்​ளனர். ஆனால், பொருட் சேதம் மிக அதி​க​மாக உள்​ளது.

கடைநிலை ஊழியர் முதற்​கொண்டு முதல்​வர் வரை அனை​வரும் ஒன்று சேர்ந்து பாடு​பட்​டதன் விளை​வாக மோந்தா புயலை சிறப்​பாக எதிர்​கொண்​டோம்’’ என்​றார். அதன் பின்​னர், முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு, பாபட்​லா, பல்​நாடு, கிருஷ்ணா, ஏலூரு, டாக்​டர் பிஆர் அம்​பேத்​கார் ஆகிய மாவட்​டங்​களை ஹெலிகாப்டரில் சென்று பார்​வை​யிட்​டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here