தெலங்கானா அமைச்சராகிறார் முகமது அசாருதீன்

0
18

தெலங்​கா​னா​வில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலை​மையி​லான அமைச்சரவையில் தற்​போது 15 பேர் இடம் பெற்றுள்ளனர். சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் எண்​ணிக்கை அடிப்​படை​யில் மேலும் 3 பேருக்கு அமைச்​சர​வை​யில் வாய்ப்பு வழங்கலாம்.

தெலங்​கா​னா​வில் முஸ்​லிம் சிறு​பான்​மை​யினருக்கு ஒவ்​வொரு முறை​யும் ஓர் அமைச்​சர் பதவி வழங்​கப்​பட்டு வரு​கிறது. இம்​முறை இந்த வாய்ப்பை யாருக்கு வாய்ப்பு வழங்​கலாம் என ரேவந்த் ரெட்டி அரசு ஆலோ​சித்து வந்​தது. பிறகு இது தொடர்​பாக கட்சி மேலிடமே முடிவு எடுக்​கும் என அறி​வித்​தது.

இந்​நிலை​யில் இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் கேப்​டன் முகமது அசா​ரு​தீன் தெலங்​கானா அமைச்​ச​ராக பதவி​யேற்க உள்​ள​தாக அரசி​யல் வட்​டாரங்​கள் தெரிவிக்​கின்​றன.

தெலங்​கா​னா​வில் கடந்த 2023 சட்​டப்​பேரவை தேர்​தலில் ஹைத​ரா​பாத் ஜூப்ளி ஹில்ஸ் தொகு​தி​யில் காங்​கிரஸ் சார்​பில் முகமது அசா​ருதீன் போட்​டி​யிட்டு தோல்வி அடைந்​தார். இதே தொகு​தி​யில் நடை​பெற உள்ள இடைத்​தேர்​தலில் அவர் மீண்​டும் போட்​டி​யிட தயா​ரா​னார். ஆனால் அவருக்கு காங்​கிரஸ் மேலிடம், மேலவை உறுப்​பினர் பதவி வழங்க தீர்​மானித்​தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here