முதலீட்டாளர்கள் வெளியேற மத்திய அரசே காரணம்: கர்நாடக தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் குற்றச்சாட்டு

0
17

கர்​நாடக தொழில் ​துறை அமைச்​சர் எம்​.பி.​பாட்​டீல் நேற்று மைசூரு​வில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கர்நாடகா​வில் பன்​னாட்டு முதலீட்​டாளர்​கள் தொழில் தொடங்​கு​வதற்​கான அனைத்து வசதி​களும் நிறைந்​துள்​ளன. ஆனால் கடந்த சில மாதங்​களாக கர்​நாடகா மீது திட்​ட​மிட்டு எதிர்​மறை பிம்​பங்​கள் கட்​டமைக்​கப்​படு​கின்​றன. இதனால் சில நிறு​வனங்​கள் கர்நாடகா​வில் இருந்து வெளி​யேறு​வ​தாக அறி​வித்​துள்​ளன. அந்த நிறு​வனங்​களு​டன் அரசு சார்​பில் பேச்​சு​வார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

மத்​தி​யில் ஆளும் பாஜக அரசு கர்​நாடகா​வுக்கு எதி​ரான மனநிலை​யில் உள்​ளது. பன்​னாட்டு முதலீட்​டாளர்​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்தி கர்​நாட​கா​வில் தொழில் தொடங்க அழைத்து வரு​கிறோம். இறு​திக்​கட்ட பேச்​சு​வார்த்​தை​யின்​போது டெல்​லி​யில் இருந்து சில அதி​காரி​கள் அவர்​களிடம் பேசி, அவர்​களை வேறு மாநிலங்​களுக்கு அனுப்பி விடு​கின்​றனர்.

கூகுள் நிறு​வனம் முதலில் பெங்​களூரு​வில் அலு​வல​கம் அமைக்க முடி​வெடுத்​தது. ஆனால் மத்​திய பாஜக அரசு தலை​யிட்​டு, அவர்களை ஆந்​தி​ரா​வுக்கு அனுப்பி விட்​டது. பிரதமர் மோடி தனது கூட்​டணி கட்சி தலை​வ​ரான சந்​திர​பாபு நாயுடு​வுக்கு அன்பளிப்பாக அதனை அளித்​துள்​ளார். செமி கன்​டக்​டர் நிறு​வனத்தை குஜ​ராத், மகா​ராஷ்டிரா ஆகிய மாநிலங்​களுக்கு மத்​திய அரசு அனுப்பி விட்​டது. கர்​நாட​கா​வில் தொழில்​துறை மோசமடைவதற்​கு மத்​திய ​அரசே ​காரணம்​. இவ்​​வாறு அவர்​ தெரிவித்​​தார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here