டெல்லியில் விமானம் அருகில் தீப்பற்றிய பேருந்து

0
25

டெல்லி விமான நிலை​யத்​தில் ஏர் இந்​தியா விமானம் அரு​கில் நிறுத்​தப்​பட்ட ஒரு பேருந்து நேற்று தீப்​பற்றி எரிந்​த​தால் பரபரப்பு உரு​வானது. டெல்​லி​யில் இந்​திரா காந்தி சர்​வ​தேச விமான நிலை​யம் உள்​ளது. இங்கு விமான நிறு​வனங்​களுக்கு ‘சாட்ஸ் ஏர்​போர்ட் சர்​வீசஸ்’ என்ற நிறு​வனம் பேருந்து சேவை வழங்கி வரு​கிறது.

இதற்கு சொந்​த​மான ஒரு பேருந்து நேற்று பிற்​பகல் மூன்​றாவது முனை​யத்​தில் ஏர் இந்​தியா விமானத்​துக்கு அரு​கில் நின்​றிருந்​தது. இந்​நிலை​யில் அந்​தப் பேருந்து திடீரென தீப்​பற்றி எரிந்​த​தால் பரபரப்பு உரு​வானது.

இதையடுத்து விமான நிலைய தீயணைப்பு படை​யினர் அங்கு விரைந்து சென்று சில நிமிடங்​களில் தீயை அணைத்​தனர். தீ விபத்து ஏற்​பட்​ட​போது பேருந்​தில் பயணி​களோ அல்​லது உடைமை​களோ இல்​லை. டிரைவர் மட்​டுமே இருந்​தார்.

அவரும் காயமின்றி தப்​பி​னார். தீ விபத்​துக்​கான காரணத்தை கண்​டறிய பேருந்​தில் ஆய்வு மேற்​கொள்​ளப்​படும் என சாட்ஸ் நிறு​வனம் அறி​வித்​துள்​ளது. மேலும் இந்த சம்​பவத்​தால் தங்​களின் வழக்​க​மான செயல்​பாடு​கள் பா​திக்​கப்​பட​வில்லை என வி​மான நிலை​யம் தெரி​வித்​துள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here