நடிகர் அஜீத்குமார் கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் போன்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே லக்கநாயக்கன்பட்டியில் உள்ள கொங்குநாடு ரைபிள் கிளப்பில் ‘ஷார்ட் கன்’ என்று அழைக்கப்படும் துப்பாக்கி சுடும் பயிற்சியில் நடிகர் அஜீத்குமார் ஈடுபட்டார்.
கடந்த இரு நாட்களாக அவர் அங்கு தங்கி இந்தப் பயிற்சியை மேற்கொண்டார். இந்த கிளப்பில் அஜீத்குமார் ஆயுட்கால உறுப்பினராக இருந்து வருவதால், அடிக்கடி இங்கு வந்து பயிற்சி மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.














