உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:
ஹலால் சான்றிதழ் பெறப்பட்ட பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, எந்தவொரு பொருளை நீங்கள் வாங்கும்போதும் அதில் ஹலால் சான்றிதழ் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சோப், துணிகள், தீப்பெட்டிகள் உள்ளிட்ட பல பொருட்கள் ஹலால் சான்றிதழ்களுடன் தற்போது வருகின்றன. இவ்வாறு வரும் பொருட்களின் விற்பனை மூலம் ரூ.25 ஆயிரம் கோடியை திரட்டி அவை தீவிரவாத அமைப்புகளிடம் வழங்கப்படுகின்றன. இந்தப் பணத்தைக் கொண்டு தீவிரவாதச் செயல்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.
அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டுவதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு முக்கிய பங்கு வகித்தது. பல்வேறு சவால்களுக்கு இடையில் ஆர்எஸ்எஸ் அமைப்பு நூற்றாண்டு கொண்டாட்டத்தை அடைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.