கரூர் களத்தை வைத்து காய்களை நகர்த்த தொடங்கிவிட்டார்கள் கதர் கட்சியின் சில தலைவர்கள்.. கூட்டணி திசையை மாற்றலாம் என கட்சிக்குள் வெளிப்படையாகவே பேசுகிறார்களாம். அண்மையில் ஆய்வுக்கு வந்த மேலிடப் பிரதிநிதியிடமும் அவர்கள் இதுபற்றி விளக்கினார்களாம்… அவரோ, எதுவாக இருந்தாலும் கட்சி மேலிடம் முடிவு செய்யும். அதுவரை வெளியில் எதுவும் பேச வேண்டாம் என கடிவாளம் போட்டுவிட்டு சென்றுவிட்டார்.
ஆனாலும், விடாது கருப்புபோல ‘செல்வ’ எதிர்ப்பு கோஷ்டியினர் முயற்சியை தொடர்கிறார்களாம். கரூருக்கு நீங்க கட்டாயம் வரணும். பாதிக்கப்பட்ட குடும்பங்கள சந்திக்கணும். நீங்க வந்தீங்கன்னா அது பெரிய மாற்றத்தை கொடுக்கும்னு டெல்லி வாரிசு தலைவரிடம் கோரிக்கை வைத்துள்ளார் ஒளிமயமான பெண் பிரதிநிதி.
விடாப்பிடியாக அவர் வைத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட வாரிசு தலைவர், பிஹார் தேர்தல் பிரச்சாரம் முடிந்ததும் கண்டிப்பாக கரூருக்கு வருகிறேன் என உத்தரவாதம் கொடுத்திருக்கிறாராம். இளம் தலைவரின் கரூர் வருகைக்குப் பிறகு களங்கள் மாறும்.. காட்சிகள் மாறும் என எல்லோரிடமும் அழுத்தம் திருத்தமாக சொல்லிக் கொண்டிருக்கிறாராம் ஒளிமயமான பெண் பிரதிநிதி.