திருப்பதி மற்றும் திருமலையில் கடந்த 3 நாட்களாக ஓயாமல் மழை பெய்து வருகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து சுவாமி தரிசனம் செய்ய திருமலைக்கு வந்த பக்தர்கள் அறைகளிலேயே தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இரண்டாவது மலைப்பாதையில் 15-வது வளைவில் நிலச்சரிவு ஏற்பட்டு, பாறைகள் சாலையில் வந்து விழுந்தன. எனினும் இதில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த நிலச்சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியுற்றனர்.