ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் மிக கனமழை: தங்கச்சிமடத்தில் 170 மில்லி மீட்டர் மழை பதிவு

0
23

வங்​கக்​கடல் பகு​தி​யில் நில​வும் காற்​றழுத்த தாழ்வு நிலை​யால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோரப் பகு​தி​களில் நேற்றுமிக கன மழை பெய்​தது. அதி​கபட்​ச​மாக தங்​கச்​சி மடத்​தில் 170 மி.மீ மழை பதிவானது. ராமேசுவரம், தங்​கச்​சிமடம், பாம்​பன், மண்​டபம் உள்​ளிட்ட கடலோரப் பகு​தி​களில் நேற்று முன்​தினம் இரவு முதல் நேற்று பிற்​பகல் வரை கன மழை பெய்​தது. இதனால் ராமேசுவரம், மண்​டபம் மற்​றும் சுற்​று​வட்​டார கிராமங்​களில் நேற்று முன்​தினம் நள்​ளிரவு முதலே மின்​சா​ரம் துண்​டிக்​கப்​பட்​டது.

கனமழை​யால் ராமேசுவரம் பேருந்து நிலை​யம், லட்​சுமணத் தீர்த்​தம், தோப்​புக்​காடு, தங்​கச்​சிமடம் விக்​டோரியா நகர், பாம்​பன் முந்​தல்​முனை, தோப்​புக்​காடு உள்​ளிட்ட தாழ்​வான பகு​தி​களில் மழை நீர் தேங்​கியது. மண்​டபம் கலைஞர் நகர், சமத்​து​வபுரம் குடி​யிருப்​பு​களில் மழைநீர் புகுந்து மக்​கள் அவதிக்​குள்​ளாகினர். மாவட்​டத்​திலேயே அதி​கபட்​ச​மாக தங்​கச்​சிமடத்​தில் 170 மி.மீ. மழை பதி​வானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here