சென்னைக்கு திரும்பிய மக்களால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி ஸ்தம்பித்தது

0
22

தீ​பாவளி விடு​முறை முடிந்து தென்​மாவட்​டங்​களில் இருந்து சென்​னைக்​குத் திரும்​பிய மக்​களால் விக்​கிர​வாண்டி சுங்​கச்​சாவடி ஸ்தம்​பித்​தது. தொடர் விடு​முறை காரண​மாக சென்​னை​யில் இருந்து லட்​சக்​கணக்​கானோர் பேருந்​து, ரயில், கார், வேன் மற்​றும் இருசக்கர வாக​னங்​களில் கடந்த 17-ம் தேதி முதல் 19-ம் தேதி நள்​ளிரவு வரை சொந்த ஊருக்​குச் சென்​றனர்.

குறிப்​பாக, சென்​னை​யில் இருந்து தென் மாவட்​டங்​களுக்கு விழுப்​புரம் மாவட்​டம் விக்​கிர​வாண்டி சுங்​கச்​சாவடி வழி​யாக சுமார் 1.60 லட்​சம் வாக​னங்​களில் பல லட்​சம் மக்​கள் கடந்து சென்​றனர். இந்​நிலை​யில், தீபாவளி விடு​முறை முடிந்​த​தால் தென்​மாவட்​டங்​களில் இருந்து சென்​னைக்கு நேற்று முன்​தினம் முதல் பொது​மக்​கள் திரும்​பத் தொடங்​கினர்.

அந்த வகை​யில் விக்​கிர​வாண்டி சுங்​கச்​சாவடியை நேற்று முன்​தினம் 17 ஆயிரம் வாக​னங்​கள் கடந்த நிலை​யில் நேற்று பகல் 12 மணிக்கு பிறகு வாக​னங்​களின் எண்ணிக்கை அதி​கரித்​தது. 8 பாதைகள் வழி​யாக​வும் வாக​னங்​கள் அனு​ம​திக்​கப்​பட்​டன. இரவு 9 மணி வரை சுமார் 40 ஆயிரம் வாக​னங்​கள் சுவங்​கச் சாவடியை கடந்​துள்​ள​தாக கூறப்​படு​கிறது.

மழை​யால் வாக​னங்​கள் வேக​மாக இயக்​கப்​பட​வில்​லை. இதனால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்​சாலை​யில் நெரிசல் ஏற்பட்டது. விழுப்​புரம் மேல வீதி​யில் நெரிசல் காரண​மாக புறவழிச்​சாலை வழி​யாக போக்​கு​வரத்து திருப்பி விடப்​பட்​டது. மேலும், மாவட்​டத்​தில் 6 இடங்​களில் நடை​பெற்று வரும் மேம்​பால கட்​டு​மான பணி​யால் சர்​வீஸ் சாலை வழி​யாக வாக​னங்​கள் இயக்கப்பட்டதால் போக்​கு​வரத்து ஸ்தம்​பித்​தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here