டெல்லியில் பசுமை பட்டாசுகளை வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

0
21

பட்டாசுகளுக்கு தடை விதிக்க கோரி அர்ஜுன் கோபால் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் பசுமை பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.

இதனிடையே பட்டாசு வெடிப்பதற்குத் தடை விதிக்கக் கோரி அர்ஜுன் கோபால் தாக்கல் செய்த மற்றொரு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லியில் பட்டாசு விற்பனைக்கும் வெடிப்பதற்கும் தடை விதித்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில், “பசுமைப் பட்டாசுகளை அக்டோபர் 18 முதல் 20 வரை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. தீபாவளிக்கு ஒரு நாள் முன்பாகவும், தீபாவளி தினத்திலும் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் பசுமை பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்கப்படுகிறது. இதை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் கண்காணிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here