அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி நேற்று தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: உத்தராகண்ட் மாநிலத்தில் நெடிய மலைகளை கடந்து கேதார்நாத் கோயில் செல்ல வேண்டும். பக்தர்களின் வசதிக்காக, ‘ரோப் வே’ கட்டுமான பணிகளை அதானி குழுமம் மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது: பக்தர்கள் எளிதாக கேதார் கோயில் சென்று வருவதற்கு ஏற்ப, ரூ.4,081 கோடி செலவில் ‘ரோப் வே’ அமைக்கும் கட்டுமானத்தை அதானி குழுமம் மேற்கொண்டுள்ளது. இந்த ரோப் வே சோன்பிரயாகில் இருந்து கேதார்நாத் வரை மொத்தம் 12.9 கி.மீ. தூரம் அமையும்.
இதன் மூலம் பக்தர்களின் பயணம் 9 மணி நேரத்தில் இருந்து வெறும் 36 நிமிடங்களாக குறையும். இது பயணிகளுக்கு எளிதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும். இந்த பணியில் ஈடுபடுவது எங்களுக்கு பெருமையாக உள்ளது. நம் அனைவருக்கும் மகாதேவன் அருள் தொடரட்டும். ஜெய் பாபா கேதார்நாத். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.