தொழிலாளர் வரைவு கொள்கை வெளியீடு: பெண்கள், சமூகப் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம்

0
29

 பெண்​கள் மற்​றும் சமூகப் பாது​காப்​பில் அதிக கவனம் செலுத்​தும் வகையி​லான தொழிலா​ளர் வரைவு கொள்கையை மத்​திய அரசு வெளி​யிட்​டுள்​ளது.

வரும் 2030-ம் ஆண்​டுக்​குள் பெண்​களின் பங்​களிப்பை 35 சதவீத​மாக அதி​கரிக்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. அதேபோன்​று, இளைஞர்​களுக்​கான தொழில்​முனைவு மற்​றும் அதற்​கான வழி​காட்​டு​தல் முயற்​சிகளை விரி​வாக்​கம் செய்​வதை​யும் முக்​கிய நோக்​க​மாக கொண்டு அரசு இந்த வரைவு கொள்கையை தயாரித்​துள்​ளது.

பல தளங்​களை தேடிச் சென்று பார்​வை​யிடு​வதற்கு பதிலாக, தொழிலா​ளர்​கள் தங்​கள் நன்​மை​களை ஒரே தொகுப்​பின் கீழ் பார்த்து பயன் பெற உதவும் வகை​யில் இபிஎப்ஓ, இஎஸ்​ஐசி, பிஎம்​-ஜெய், இ-ஷ்ரம் மற்​றும் மாநில நல வாரி​யங்​களை ஒருங்​கிணைத்து ஒரு யுனிவர்​சல் சமூகப் பாது​காப்பை உரு​வாக்​கு​வதை இந்த வரைவு கொள்கை திட்​டம் முக்​கிய நோக்​க​மாக கொண்​டுள்​ளது.

இதேபோல், திறன் இந்​தி​யா, தேசிய பயிற்சி ஊக்​கு​விப்பு திட்​டம், பிரதமரின் கவுசல் விகாஸ் ஆகிய​வற்றை ஒருங்​கிணைப்​பதை ஷ்ரம் சக்தி நிதி 2025 இலக்​காக கொண்​டுள்​ளது. வணி​கங்​களைப் பொறுத்​தவரை, சுய சான்​றிதழ் மற்​றும் எளிமைப்​படுத்​தப்​பட்ட எம்​எஸ்​எம்இ ரிட்​டர்ன்ஸ் உடன் ஒற்றைச் சாளர டிஜிட்​டல் இணக்​கத்தை இந்த தொழிலாளர் வரைவு கொள்கை முன்மொழிந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here