அனைத்து குடும்பங்களுக்கும் அரசு வேலை: பிஹாரில் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி

0
19

மொத்​தம் 243 இடங்களை கொண்ட பிஹார் சட்​டப்​பேர​வைக்கு நவம்​பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்​டங்​களாக தேர்​தல் நடை​பெற உள்​ளது. நவம்​பர் 14-ல் தேர்தல் முடிவு அறிவிக்​கப்பட உள்​ளது.

இந்​நிலை​யில் ஆர்​ஜேடி தலை​வரும் முன்​னாள் துணை முதல்​வரு​மான தேஜஸ்வி யாதவ், தலைநகர் பாட்​னா​வில் செய்​தி​யாளர்​களிடம் பேசி​ய​தாவது:

நாங்​கள் ஆட்​சிக்கு வந்​தால் அரசு வேலை​வாய்ப்பு பெறாத அனைத்து குடும்​பங்​களுக்​கும் குடும்​பத்​தில் ஒரு​வருக்கு அரசு வேலை வழங்​கு​வோம். எங்​கள் அரசு பதவி​யேற்ற 20 நாட்​களுக்​குள் இது தொடர்​பாக சட்​டம் இயற்​று​வோம். அடுத்த 20 மாதங்​களுக்​குள் இந்த வாக்​குறு​தியை நிறைவேற்​று​வோம்.இவ்​வாறு தேஜஸ்​வி ​யாதவ்​ கூறி​னார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here