வெள்ள பாதிப்பை பார்வையிட்டபோது தாக்குதல்: காயமடைந்த பாஜக எம்.பி.யிடம் நலம் விசாரித்தார் மம்தா

0
16

மேற்கு வங்​கத்​தின் வட மாவட்​டங்​களில் பெய்த கனமழை காரண​மாக வெள்​ளப் பெருக்​கும் நிலச்​சரி​வும் ஏற்பட்டது. இதில் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 30 ஆக அதி​கரித்​துள்​ளது.

இந்​நிலை​யில் ஜல்​பைகுரி மாவட்​டத்​தில் பாதிக்​கப்​பட்ட நக்​ரகட்டா பகு​தியை பாஜகவை சேர்ந்த மால்டா உத்​தர் எம்​.பி. கஜேன் முர்​மு, சிலிகுரி எம்​எல்ஏ. சங்​கர் கோஷ் உள்​ளிட்​டோர் நேற்று முன்​தினம் பார்​வை​யிடச் சென்​றனர்.

இவர்​கள் மீது ஒரு கும்​பல் கல்​வீசி தாக்​கிய​தில் முர்​மு, கோஷ் ஆகியோர் பலத்த காயம் அடைந்​தனர். இவர்​கள் சிலிகுரி​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர்.

3 நாட்​களுக்​குள் அறிக்கை: இந்​நிலை​யில், முதல்​வர் மம்தா பானர்ஜி, முர்​முவை நேற்று நேரில் சந்​தித்து நலம் விசா​ரித்​தார். அப்​போது மேல் சிகிச்சை உட்பட அவருக்கு தேவை​யான அனைத்து உதவி​களை​யும் அரசு செய்​யும் என குடும்​பத்​தினரிடம் உறுதி அளித்​தார். இதுகுறித்து மத்​திய உள்​துறை அமைச்​சகத்​திடம் மக்​களவை செயல​கம் நேற்று அறிக்கை கோரியது. மேற்கு வங்க அரசிட​மிருந்து 3 நாட்​களுக்​குள் அறிக்கை பெற்று சமர்ப்​பிக்​கு​மாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

என்ஐஏ விசா​ரணை: மேற்கு வங்க பாஜக தலை​வர் சமிக் பட்​டாச்​சார்யா நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, ‘‘முர்​மு, கோஷ் மீதான தாக்​குதல் குறித்து என்ஐஏ விசா​ரணை நடத்த வேண்​டும் என்று நாங்​கள் கோரு​கிறோம். இது முன்​கூட்​டியே திட்​ட​மிடப்​பட்ட தாக்​குதல் ஆகும்.

சட்​ட​விரோத வங்​கதேச குடியேறிகள் மற்​றும் ரோஹிங்​கி​யாக்​கள் இந்த தாக்​குதலை நடத்​தி​யுள்​ளனர். இதை தடுக்க மாநில காவல்​துறை எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை’’ என்​றார். சிலிகுரி​யில் முகாமிட்​டுள்ள முதல்​வர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பக்​கத்​தில், “கனமழை, நிலச்​சரி​வால் பாதிக்​கப்​பட்ட பகு​தி​களின் நிலையை தனிப்​பட்ட முறை​யில் உன்​னிப்​பாக கவனித்து வருகிறேன்.

மீட்​புப் பணி​களை விரைவுபடுத்​த​வும் பாதிக்​கப்​பட்ட அனை​வருக்​கும் தேவை​யான உதவி​களை உடனடி​யாக செய்​ய​வும் நடவடிக்கை எடுக்​கு​மாறு சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​களுக்கு உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. சேதமடைந்த சாலைகள் மற்​றும்​ தொலைத்​தொடர்​பு கட்​டமைப்​பு​களை சீர்​செய்​யும்​ பணி நடை​பெறுகிறது’’ என பதி​விட்​டுள்​ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here