மகாராஷ்டிரா,  சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் ரூ.24,634 கோடியில் 4 ரயில்வே திட்டங்களுக்கு அனுமதி

0
18

பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான பொருளா​தார விவ​காரங்​களுக்​கான அமைச்​சரவை குழு ரூ.24,634 கோடி மதிப்​பில் 4 மல்​டி-டி​ராக்​கிங் ரயில்வே திட்​டங்​களுக்கு ஒப்​புதல் அளித்​துள்​ளது.

இதுகுறித்து வெளி​யிடப்​பட்ட அதி​காரப்​பூர்வ அறிக்​கை: மகா​ராஷ்டி​ரா, மத்​திய பிரதேசம், குஜ​ராத் மற்​றும் சத்​தீஸ்​கரில் உள்ள 18 மாவட்​டங்​களை உள்​ளடக்கி 4 ரயில் திட்​டங்​கள் செயல்​படுத்​தப்பட உள்​ளன. இதனால் இந்​திய ரயில்​வே​யின் தற்​போதைய நெட்​வொர்க் கூடு​தலாக 894 கி.மீ. அதி​கரிக்​கும்.

இந்த திட்​டங்​கள் மகா​ராஷ்டி​ரா​வில் (வர்தா மற்​றும் பூசாவல் இடையே 3-வது மற்​றும் 4-வது பாதை) 314 கி.மீ. ரயில் பாதையை உள்​ளடக்​கிய​தாக இருக்​கும். மேலும், மகா​ராஷ்டிரா மற்​றும் சத்​தீஸ்​கரில் உள்ள கோண்​டி​யா-டோங்​கர்​கர் இடையே 84 கி.மீ. நீள 4-வது பாதை, குஜ​ராத் மற்​றும் மத்​திய பிரதேசத்​தில் வதோத​ரா-ரத்​லம் இடையே 256 கி.மீ. நீள 3-வது மற்​றும் 4 வது பாதை, மத்​திய பிரதேசத்​தில் இடார்​சி-போ​பால்​-பினா இடையே 84 கீ.மீ. நீள 4-வது பாதை ஆகியவை இந்த திட்​டத்​தில் செயல்​படுத்​தப்பட உள்​ளன.

அசாம், குஜ​ராத்​துக்கு ரூ.707 கோடி கடந்த ஆண்​டில் வெள்​ளம் மற்​றும் நிலச்​சரி​வால் பாதிக்​கப்​பட்ட அசாம், குஜ​ராத் மாநிலங்​களுக்கு மத்​திய அமைச்​சர் அமித் ஷா தலை​மையி​லான உயர்​மட்​டக் குழு ரூ.707.97 கோடி நிதி உதவிக்கு ஒப்​புதல் அளித்​துள்​ளது. மேலும், தேசிய பேரிடர் மீட்பு நிதியி​லிருந்து ஹரி​யா​னா, மத்​திய பிரதேசம் மற்​றும் ராஜஸ்​தான், மாநிலங்​களுக்கு தீயணைப்பு சேவை விரி​வாக்​கம் மற்​றும் நவீனமய​மாக்​கலுக்கு ரூ.903.67 கோடி நிதி உதவி அளிப்​ப​தற்​கும் உயர்​மட்​டக் குழு அனு​மதி வழங்​கி​யுள்​ளது.

வெள்ள நிவாரணத்​துக்கு வழங்​கப்​படும் ரூ.707.97 கோடி​யில் அசா​முக்கு ரூ.313.69 கோடி​யும், குஜ​ராத்​துக்கு ரூ.394.28 கோடி​யும் பகிர்ந்து அளிக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. பிரதமர் நரேந்​திர மோடி​யின் தலை​மையி​லான மத்​திய அரசு, இயற்கை சீற்​றம் மற்​றும் பேரிடர்​களின் போது மாநிலங்​களு​டன் தோளோடு தோள் நின்று தேவை​யான அனைத்து ஆதர​வை​யும் வழங்​கும் என்று அந்த அறிக்​கை​யில்​ கூறப்​பட்​டுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here