தமிழக வனப்பகுதிகளில் 3,170 யானைகள் உள்ளன: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

0
20

தமிழகத்​தில் 3,170 யானை​கள் உள்​ள​தாக வனத் துறை அமைச்​சர் ஆர்​.எஸ்​.​ராஜகண்​ணப்​பன் தெரி​வித்​துள்​ளார். யானை​கள் பாது​காப்​பில் தமிழகம் நீண்​ட​கால​மாகவே முன்​னணி வகிக்​கிறது. இந்​நிலை​யில், கர்​நாடகா​வுடன் இணைந்து கடந்த மே 23 முதல் 25-ம் தேதி வரை 3-வது ஒருங்​கிணைந்த யானை​கள் கணக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டது.

தமிழகத்​தில் புலிகள் காப்​பகங்​கள், வனவிலங்கு சரணால​யங்​கள், பிராந்​திய வனப் பிரிவு​கள் மற்​றும் ஒரு தேசி​யப் பூங்​கா​வில் நடத்​தப்​பட்ட கணக்​கெடுப்​பில் 2,043 வனத் துறைப் பணி​யாளர்​கள் மற்​றும் தன்​னார்​வலர்​கள் பங்​கேற்​றனர். மொத்​த​முள்ள யானை​களில் 44 சதவீதம் வளர்ச்​சி​யடைந்​தவை என்​பது தெரிய​வந்​துள்​ளது.

இந்​நிலை​யில், யானை​கள் கணக்​கெடுப்பு குறித்த அறிக்​கையை தலை​மைச் செயல​கத்​தில் வனத் துறை அமைச்​சர் ஆர்​. எஸ். ராஜகண்​ணப்​பன் நேற்று வெளி​யிட்​டார். இதுகுறித்து அவர் கூறிய​தாவது: தமிழகத்​தில் 3,170 காட்டு யானை​கள் உள்​ளன. முந்​தைய கணக்​கெடுப்​பில் 3,063 யானை​கள் உள்​ள​தாக தெரிய​வந்​தது.

தற்​போது 107 யானை​கள் அதி​கம் உள்​ளன. தமிழக யானை​களின் எண்​ணிக்​கை​யில் ஏற்​பட்​டுள்ள இந்த நிலை​யான வளர்ச்​சி, அறி​வியலை அடிப்​படை​யாகக் கொண்ட வன விலங்கு மேலாண்மை மற்​றும் சமூகப் பங்​களிப்​பின் காரண​மாக ஏற்​பட்​டுள்​ளது.

வளம் குன்​றிய காடு​களை மீட்​டெடுப்​பது, யானை வழித்​தடங்​களை வலுப்​படுத்​து​வது, மனித-​யானை மோதலைத் தடுக்க தொழில்​நுட்​பத்​தைப் பயன்​படுத்​து​வது உள்​ளிட்ட எங்​களது அணுகு​முறை​கள் முழு​மை​யான​தாக​வும், மக்​களை மைய​மாகக் கொண்​ட​தாக​வும் உள்​ளன. இவ்​வாறு தெரி​வித்​தார். வனத் துறைச் செயலர் சுப்​ரியா சாஹு கூறும்​போது, “யானை​கள் நமது காடு​களி​லும், கலாச்​சார அடை​யாளத்​தி​லும் அங்​க​மாக உள்​ளன. அவற்​றின் எண்​ணிக்கை தொடர்ந்து அதி​கரித்து வரு​வது, நமது கொள்​கைகள் பலனளிப்​ப​தற்​கான அறிகுறி​யாகும்.

வாழ்விட மறுசீரமைப்​பு, அந்​நிய களைச்​செடிகளை அகற்​று​தல், தீவனம் மற்​றும் நீர் மேலாண்​மையை மேம்​படுத்​துதல் மற்​றும் யானை​களின் நடமாட்​டத்​தைக் கண்​காணிக்​கத் தொழில்​நுட்​பத்​தைப் பயன்​படுத்​துதல் ஆகிய​வற்​றில் முழுகவனம் செலுத்தி வரு​கிறோம்” என்​றார். நிழ்​வில், முதன்மை தலைமை வனப் பாது​காவலர் நி​வாஸ் ஆர்​.ரெட்​டி, தலைமை வன உயி​ரினக் காப்​பாளர் ராகேஷ் குமார் டோக்ரா பங்​கேற்​றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here