மகளிர் கிரிக்கெட் முன்னேற பாடுபட்டவர்களுக்காக உலக கோப்பையை வெல்ல நாங்கள் விரும்புகிறோம்: ஜெமிமா ரோட்ரிக்ஸ்

0
20

ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடர் இந்​தி​யா, இலங்கை ஆகிய நாடு​களில் நடை​பெற்று வரு​கிறது. நேற்று முன்​தினம் இலங்​கை​யின் கொழும்பு நகரில் இந்​தி​யா, பாகிஸ்​தான் மகளிர் அணி​கள் மோதிய லீக் ஆட்​டம் நடை​பெற்​றது. முதலில் விளை​யாடிய இந்​திய மகளிர் அணி 50 ஓவர்​களில் 247 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக ஹர்​லின் தியோல் 46, ரிச்சா கோஷ் 35, பிர​திகா ராவல் 31 ஜெமிமா ரோட்​ரிக்ஸ் 32 ரன்​கள் சேர்த்​தனர். பாகிஸ்​தான் அணி தரப்​பில் டயானா பெய்க் 4 விக்​கெட்​கள் வீழ்த்​தி​னார்.

இதைத் தொடர்ந்து 248 ரன்​கள் என்ற இலக்​குடன் விளை​யாடிய பாகிஸ்​தான் அணி 43 ஓவர்​களில் 159 ரன்​களுக்கு சுருண்​டது. அதி​கபட்​ச​மாக சித்ரா அமின் 81, நடா​லியா பெர்​வைஷ் 33, சித்ரா நவாஷ் 14 ரன்​கள் சேர்த்​தனர். மற்ற எந்த வீராங்​க​னை​யும் இரட்டை இலக்க ரன்னை எட்​ட​வில்​லை. இந்​திய அணி தரப்​பில் கிரந்தி கவுட், தீப்தி சர்மா ஆகியோர் தலா 3 விக்​கெட்​களை வீழ்த்​தினர். 88 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற இந்​திய அணிக்கு இது 2-வது வெற்​றி​யாக அமைந்​தது.

போட்டி முடிவடைந்​ததும் இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்​ரிக்ஸ் கூறிய​தாவது: ஒரு நேரத்​தில் ஒரு போட்​டி​யில் மட்​டுமே கவனம் செலுத்த விரும்​பு​கிறோம். எங்​களது ஆலோ​சனை​யின்​போதும் ஆட்​டத்​தில் மட்​டுமே முழு​மை​யாக கவனம் செலுத்த வேண்​டும் என்​பது குறித்தே ஆலோ​சிக்​கிறோம். ஏனெனில், இந்த உலகக் கோப்பை குறித்து வெளி​யில் எத்​தனை விஷ​யங்​கள் சென்று கொண்​டிருக்​கின்றன என்​பது எங்​களுக்​குத் தெரி​யும்.

வெளி​யில் நடக்​கும் விஷ​யங்​களுக்கு கவனம் கொடுக்​காமல், எங்​களது சிறப்​பான ஆட்​டத்தை வெளிப்​படுத்த விரும்​பு​கிறோம். இந்​திய அணி​யில் உள்ள ஒவ்​வொரு​வரும் சக வீராங்​க​னை​களின் வெற்​றியை தங்​களின் வெற்​றி​யாகக் கருதி கொண்​டாடு​கிறோம். எங்​களது இயல்​பான இந்த குணம் அணியை வலு​வாக வைத்​துள்​ளது.

இந்​தி​யா​வில் மகளிர் கிரிக்​கெட்​டின் வளர்ச்சி குறித்து பேச வேண்​டுமென்​றால், அணி​யில் நான் நுழைந்​த​போது மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்​வாமி போன்​றோர் எனக்கு மூத்த வீராங்​க​னை​களாக இருந்​தனர். தற்​போது ஹர்​மன்​பிரீத் மற்​றும் ஸ்மிருதி மந்​தனா ஆகியோர் அணியை சிறப்​பாக வழிநடத்​துகிறார்​கள். அணிக்​காக அனை​வரும் தங்​களால் முடிந்த அனைத்​தை​யும் கொடுக்க விரும்​பும் சூழலை அவர்​கள் உரு​வாக்​கி​யுள்​ளனர்.

இந்​தி​யா​வில் மகளிர் கிரிக்​கெட் வளரக் காரண​மாக இருந்​தவர்​களுக்​காக உலகக் கோப்​பையை வெல்ல விரும்​பு​கிறோம். குவாஹாட்​டி​யில் விளை​யாடிய முதல் போட்​டி​யும், இப்​போது கொழும்பு நகரில் விளை​யாடிய போட்​டி​யிலும் பேட்​டிங்​கிற்கு சிறிது சவால்​கள் இருந்​தன. சுழற்​பந்து வீச்​சாளர்​கள் மிக​வும் சிறப்​பாக பந்து வீசினர்.

எனவே அதை நாங்​கள் தகவ​மைத்​துக் கொண்டு ஆட்​டத்தை ஆழமாக எடுத்துச் செல்​லும் வகை​யில், பார்ட்​னர்​ஷிப்பை உரு​வாக்க வேண்​டும் என நினைத்​தோம். அணி​யில் உள்ள அனைவரும் வெற்​றிக்​காக பங்​களித்​தனர், இறு​தி​யில், ரிச்சா கோஷின் அதிரடி பேட்​டிங் வெற்றி பெறு​வதற்​கான இலக்கை கொடுக்​க உதவியது. இவ்​வாறு ஜெமி​மா ரோட்​ரி​க்​ஸ்​ கூறி​னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here