அலிகர் கொலை வழக்கில் தலைமறைவான பெண் சாமியார் பூஜாவை தேடும் பணி தீவிரம்

0
22

 உ.பி.​யின் அலிகர் நகரில் கடந்த 2017-ல் ஆன்​மிக மடம் தொடங்​கிய​வர் பெண் சாமி​யார் பூஜா சகுன் பாண்டே எனும் அன்​னபூர்ணா பாரதி (40). இவருக்கு பல ஆயிரம் சீடர்​கள் உள்​ளனர். நிரஞ்​சன் அகா​டா​வில் மகா மண்​டலேஷ்வர் பட்​டம் பெற்ற இவர், அகில இந்​திய இந்து மகா சபை​யின் பொதுச் செய​லா​ள​ராக​வும் உள்​ளார்.

பூஜா, கடந்த 2019 ஜனவரி​யில் மகாத்மா காந்​தி​யின் நினைவு தினத்​தில் அவரது உரு​வப் பொம்​மையை துப்​பாக்​கி​யால் சுட்​டு, அதற்கு தீவைத்து எரித்​தவர். இந்த வழக்​கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்​தார். இந்த வழக்​கில் பூஜா​ மடத்தின் நிர்​வாகி​யும் தொழில​திபரு​மான அபிஷேக் குப்​தா​வும் (32) கைதானார். பிறகு அபிஷேக் – பூஜா இடையே விரோதம் ஏற்​பட்​டது.

இதனால், மற்​றொரு மட நிர்​வாகி அசோக் பாண்​டேவுடன் இணைந்து அபிஷேக்கை கொலை செய்தார். இந்த வழக்கை விசா​ரித்த அலிகர் போலீ​ஸார் பஸல், அசோக் பாண்டே ஆகிய இரு​வரை​யும் கைது செய்​தனர். நேற்று கொலை​யாளி ஆசீப்பை கைது செய்​தனர். தலைமறை​வான சாமி​யார் பூஜா பற்​றிய தகவலுக்கு ரூ.25,000 வெகுமதி அறி​வித்​துள்​ளனர்.

இந்நிலையில் பூஜா பற்​றிய பல அதிர்ச்​சிகர தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. தனது மட நிர்​வாகி அசோக் பாண்​டேவை ரகசி​ய​மாக திரு​மணம் செய்​து​கொண்ட பூஜாவுக்கு 2 குழந்​தைகள் உள்​ளன. இந்த அசோக், அகில இந்​திய இந்து மகா சபை​யின் தேசிய செய்​தித் தொடர்​பாள​ராக உள்​ளார். இரு​வரும் தங்​கள் குழந்​தைகளை வேறு இடத்​தில் ரகசி​ய​மாக வளர்த்து வரு​வ​தாகத் தெரி​கிறது.

மேலும் கொல்​லப்​பட்ட அபிஷேக்​குட​னும் பூஜா நெருக்​கத்தை வளர்த்​திருந்​தார். தன்னை திரு​மணம் செய்​து​கொள்​ளு​மாறு அவரிடம் வலி​யுறுத்தி வந்​துள்​ளார். இதற்கு மறுத்​த​தால்​தான் பூஜாவுடன் அபிஷேக்​கிற்கு விரோதம் ஏற்​பட்​டுள்​ளது. இந்த விரோதம், அபிஷேக்கை கொலை செய்​யும் அளவுக்கு சென்​று​விட்​டது. இந்​நிலை​யில் பூஜாவை போலீ​ஸார்​ தேடுகின்​றனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here