நவராத்திரி பூஜையை முன்னிட்டு குமரிமாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்ட சுவாமி விக்கிரகங்கள், ஒன்பது நாட்கள் பூஜை முடிந்து நேற்று தமிழக எல்லை களியக்காவிளைக்கு திரும்பின. கேரள அரசு அதிகாரிகள் முறைப்படி தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைத்த விக்கிரகங்கள், குழித்துறை மகாதேவர் கோயிலில் தங்கியிருந்தன. இன்று (6-ம் தேதி) குழித்துறையில் இருந்து மார்த்தாண்டம், தக்கலை வழியாக பத்மனாபபுரம் சென்றடைகின்றன.