பாக் நீரிணை கடல் பகுதியை நீந்திக் கடந்த மாற்றுத் திறனாளி சிறுவன்

0
24

ஊனம் தடையல்ல என்ற விழிப்​புணர்வை ஏற்​படுத்த இலங்​கை​யில் உள்ள தலைமன்​னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்​முனை வரை​யிலான பாக் நீரிணை கடல் பகு​தியை மாற்​றுத் திற​னாளி சிறு​வன் 9 மணி நேரம் 11 நிமிடங்​களில் நீந்​திக் கடந்​தார். சென்னை முகப்​பேர் மேற்கு பகு​தி​யைச் சேர்ந்த பெரி​யார் செல்​வன், பத்​மப்​பிரியா தம்​ப​தி​யின் மகன் புவிஆற்​றல் (12). முகப்​பேரில் உள்ள தனி​யார் பள்​ளி​யில் 8-ம் வகுப்பு படிக்​கிறார். இவர் முழங்​காலுக்கு கீழே பாதிக்​கப்​பட்ட மாற்​றுத் திற​னாளி​யா​வார்.

2022-ல் சென்னை ஷெனாய் நகரில் உள்ள தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யத்​தின் வழி​காட்​டு​தலுடன், மாணவர் புவி ஆற்​றல் நீச்​சல் பயற்​சி​யைத் தொடங்​கி​னார். 2024-ல் கோவா​வில் நடை​பெற்ற தேசிய அளவி​லான நீச்​சல் போட்​டிகளில் தங்​கம் மற்​றும் வெள்​ளிப் பதக்​கம் வென்​றுள்​ளார்.

இந்​நிலை​யில், நீந்​து​வதற்கு ஊனம் தடையல்ல என்​பதை வலி​யுறுத்​து​வதற்​காக, இலங்​கை​யில் உள்ள தலைமன்​னாரிருந்து தனுஷ்கோடி வரை சுமார் 30 கி.மீ. தொலைவி​லான பாக் நீரிணைக் கடலை நீந்​து​வதற்​காக இந்​திய வெளி​யுறவுத் துறை, இலங்கை தூதரகம் மற்​றும் பாது​காப்பு துறை அமைச்​சகத்​திடம் அனு​மதி கோரி​யிருந்தனர்.

உரிய அனு​மதி கிடைத்த நிலை​யில் கடந்த 3-ம் தேதி ராமேசுவரம் மீன்​பிடித் துறை​முகத்​தில் இருந்து ஒரு விசைப்​படகு மற்​றும் நாட்​டுப் படகில்சிறு​வனின் பெற்​றோர், பயிற்​சி​யாளர், மருத்​து​வர் மற்​றும் மீனவர்​கள் உள்​ளிட்ட 20 பேர் கொண்ட குழு​வினருடன் தலைமன்​னாருக்கு புறப்​பட்டு சென்​றனர். நேற்று முன்​தினம் அதி​காலை 2.45 மணி​யள​வில் தலைமன்​னாரிலிருந்து நீந்​தத் தொடங்​கிய சிறு​வன் காலை 11.56 மணிக்கு தனுஷ்கோடி அரிச்​சல்​முனை கடற்​பகு​தியை வந்​தடைந்​தார்.

தொடர்ந்து 9 மணி நேரம் 11 நிமிடங்​களில் 30 கி.மீ. தொலைவு நீந்​தி​யுள்​ளார். இதன் மூலம் மாற்​றுத் திற​னாளி மாணவர், கடலில் அதிக தூர​மும், அதிக நேர​மும் தனி​யாக நீந்​திய சாதனையை புவி ஆற்றல் படைத்​துள்​ளார்.

இதற்கு முன் தலைமன்​னார், தனுஷ்கோடி இடையே​யான பாக் நீரிணை கடல் பகு​தியை 2022 மார்ச் 20-ம் தேதி மும்​பையை சேர்ந்த, ஆட்​டிசத்​தால் பாதிக்​கப்​பட்ட சிறுமி ஜியா ராய் தனது 13 வயதில் நீந்​திக் கடந்​துள்​ளார். இந்த சாதனையை​யும் சிறு​வன் புவி ஆற்​றல் முறியடித்​துள்​ளார். சிறு​வன் புவி ஆற்​றலுக்கு இந்​திய கடலோர காவல் படை​யின​ரால் சிறப்​பான வரவேற்பு அளிக்​கப்​பட்​டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here