ட்ரம்பின் காசா போர் நிறுத்த திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி முழு ஆதரவு

0
21

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பின் காசா போர் நிறுத்த திட்​டத்​துக்கு பிரதமர் மோடி முழு ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் முதல் இஸ்​ரேல் ராணுவத்​துக்​கும் காசா பகு​தியை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகளுக்​கும் இடையே போர் நடை​பெற்று வரு​கிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்மையில் 21 அம்ச அமைதி திட்​டத்தை அறி​வித்​தார்.

‘‘தீ​விர​வாதம் இல்​லாத அமைதி மண்​டல​மாக காசா மாற்​றப்​படும். ஹமாஸ் பிடி​யில் உள்ள இஸ்​ரேல் பிணைக் கைதி​கள் உடனடியாக விடு​தலை செய்​யப்பட வேண்​டும். உயி​ரிழந்த இஸ்​ரேலியர்​களின் உடல்​களை ஒப்​படைக்க வேண்​டும். காசா​வில் இருந்து இஸ்​ரேல் ராணுவம் படிப்​படி​யாக வெளி​யேறும். பாலஸ்​தீனர்​களை கொண்ட குழு​வின் தலை​மை​யில் காசா இடைக்​கால நிர்​வாகம் அமைக்​கப்​படும். இதில் ஹமாஸுக்கு இடம் அளிக்​கப்​ப​டாது’’ என்று அதிபர் ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார். அதிபர் ட்ரம்​பின் போர் நிறுத்த திட்​டத்​துக்கு இஸ்​ரேல் பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு ஒப்​புதல் அளித்​துள்​ளார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிருபர்​களிடம் நேற்று கூறும்​போது, “அமெரிக்​கா​வின் அமைதி திட்​டத்தை ஹமாஸ் ஏற்​றுக் கொள்ள வேண்​டும். ஆயுதங்​களை கைவிட வேண்​டும். இல்​லை​யெனில் இஸ்​ரேல் ராணுவ நடவடிக்​கை​யில் ஹமாஸ் தீவிர​வா​தி​கள் முழு​மை​யாக அழிக்​கப்​படு​வார்​கள். இதற்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிக்​கும்’’ என்று எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

இந்த சூழலில் பிரதமர் நரேந்​திர மோடி சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: காசா போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்​மொழிந்​துள்ள அமைதி திட்​டத்தை நாங்​கள் முழு​மனதுடன் வரவேற்​கிறோம், ஆதரிக்​கிறோம்.

இத்​திட்​டம் பாலஸ்​தீனம், இஸ்​ரேல் மற்​றும் மேற்​காசிய பிராந்​தி​யத்​தில் நீடித்த அமை​திக்கு வழி​வகுக்​கும். காசா மோதலை முடிவுக்கு கொண்டு வரவும், அமை​தியை ஏற்​படுத்​த​வும் அதிபர் ட்ரம்ப் எடுக்​கும் முயற்​சிகளுக்கு அனைத்து தரப்​பினரும் ஆதரவு அளிப்​பார்​கள்​. இவ்​வாறு அவர் கூறினார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here