உழைப்பே வறுமையை போக்கி வளம் சேர்க்கும்: அரசியல் தலைவர்கள் ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்து

0
25

சென்னை: ​நாடு முழு​வதும் இன்று ஆயுத பூஜை, நாளை விஜயதசமி பண்​டிகை கொண்​டாப்​படும் நிலை​யில் அரசி​யல் கட்சித் தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: உழைப்​பின் உன்​னதத்தை அனை​வரும் அறிந்​து, செய்​யும் தொழிலை தெய்​வ​மென மதித்​து, அன்னை பராசக்​தி​யின் அருளை வேண்​டி, தொழில் சார்ந்த கருவி​களை தெய்​வத்​தின் திரு​வடிகளில் படைத்து வழிபடும் நாள் ஆயுத பூஜை திரு​நாளாகும்.

ஆயுத பூஜை மற்​றும் விஜயதசமி திரு​நாட்​களை மகிழ்ச்​சி​யுடன் கொண்​டாடும் தமிழக மக்​கள் அனை​வரும், அனைத்து நலமும், வளமும் ஒருங்கே பெற்று சீரோடும், சிறப்​போடும் சிறந்து விளங்​கிட அருள் புரி​யு​மாறு, தாயாக விளங்​கும் அன்னை பராசக்​தி​யைப் போற்றி வணங்​கி, அனை​வருக்​கும் ஆயுத பூஜை மற்​றும் விஜயதசமி நல்​வாழ்த்​துகளை தெரிவிக்கிறேன்.

முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம்: ‘அனைத்​தும் வெற்​றி’ என்ற நம்​பிக்​கை​யில், அன்னை மகா சக்​தியை வணங்கி கல்வி கலை, தொழில் போன்​றவற்றை தொடங்​கும் நாள் விஜயதசமி திரு​நாளாகும். இத்​தகைய சிறப்புமிக்க ஆயுத பூஜை மற்​றும் விஜயதசமி திரு​நாளில் முப்​பெரும் தேவியரின் ஆசியால் அனை​வர் வாழ்​விலும் வெற்றி மேல் வெற்றி கிட்​டட்​டும்.

தமிழ் மாநில காங்​கிரஸ் தலை​வர் ஜி.கே.​வாசன்: நம் அறிவு வளர்ச்​சிக்​கும், பல்​வேறு தொழில்​நுட்ப வளர்ச்​சிக்​கும் வித்​தாக அமை​யும் அழியா செல்​வம் கல்விக்கு கடவுளாக விளங்​கும் சரஸ்​வ​தியை போற்​றும் வித​மாக சரஸ்​வதி பூஜை கொண்​டாடப்​படு​கிறது. சாதி, மத, பேதம் இல்​லாமல் அனை​வ​ராலும் கொண்​டாடப்​படும் இவ்​விழா​வில் தாங்​கள் தங்​கள் வாழ்​வில் தொழிலிலும், கல்​வி​யிலும் சிறந்​து​விளங்கி உயர வேண்​டும், வளர வேண்​டும்.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடி​வி.​தினகரன்: ஊக்​கத்​துடன் கூடிய உழைப்பே வறுமை​யைப் போக்கி வாழ்​வில் வளம் சேர்க்​கும் என்​பதை உணர்த்​தும் இந்​நாட்​களில், தமிழக மக்​கள் அனை​வரும் அனைத்து வளமும் பெற்று நல்​வாழ்வு பெற்​றிட வேண்​டும்.

கொங்​கு​நாடு மக்​கள் தேசியகட்சி பொதுச்​செய​லா​ளர் ஈ.ஆர்​.ஈஸ்​வரன்: ஒரு நாட்டை முன்​னேற்ற பாதை​யில் கொண்டு செல்ல வேண்​டுமென்​றால் தொழில் நிறு​வனங்​களின் வளர்ச்சி மேலோங்க வேண்​டும். தொழில் நிறு​வனங்​களின் வளர்ச்சி மேலோங்​கு​வதற்கு தொழிலா​ளர்​களின் கடின உழைப்பே முக்​கிய காரண​மாகும். அத்​தகைய தொழிலா​ளர்​களுக்​கும், மாணவச் செல்​வங்​கள் கல்​வி​யில் சிறந்து விளங்​கிட​வும் ஆயுத பூஜை மற்​றும் விஜயதசமி நல்​வாழ்த்​துகளை தெரி​விக்​கிறேன்.

இந்​திய ஜனநாயகக் கட்சி தலை​வர் ரவிபச்​ச​முத்​து: இந்த நல்ல நாளில் இந்​திய தேசத்​தி​லும், தமிழகத்​தி​லும் தொழில் வளமும், கல்வி மற்​றும் செல்​வ​மும் பெரு​கி, முப்​பெருந் தேவியர்​களின் ஆசி​யுடன், கல்​வி​யில் சிறந்​து, தொழிலில் உயர்ந்​து, செல்​வத்​தில் நிறைந்து மக்​கள் எல்லா வளமும் நலமும் பெற ஆயுத​பூஜை,​ விஜயதசமி வாழ்த்​துகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here