கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்நாட்டு மீனவர்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக குளங்களில் மீன் வளர்க்கவும் பிடிக்கவும் முடியாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மீனவர்கள் நேற்று வலைகளுடன் நாகர்கோவில் தபால் நிலையம் வந்து, முதல்வருக்கு அனுப்ப 4500 மனுக்களை அளித்து நூதன போராட்டத்தை நடத்தினர்.













