வழக்கறிஞர்கள், சாட்சிகள் ஆஜராகாததால் நீதிமன்றங்களில் 5.3 கோடி வழக்குகள் தேக்கம்

0
17

 நாடு முழு​வதும் விசா​ரணை நீதி​மன்​றங்​களில் தேங்​கிக் கிடக்​கும் வழக்​கு​களை தீர்ப்​ப​தில் ஏற்​படும் தாமதம் குறித்த ஒரு வழக்கு உச்ச நீதி​மன்​றத்​தில், நீதிப​தி​கள் பர்​தி​வாலா மற்​றும் விஸ்​வ​நாதன் அடங்​கிய அமர்வு முன்பு கடந்த வாரம் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது, தெரிய​வந்த விவரம் வரு​மாறு: நாடு முழு​வதும் உள்ள பல்​வேறு நீதி​மன்​றங்​களில் 5.34 கோடி வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன. இதில் உயர் நீதி​மன்​றங்​களில் 63.8 லட்​சம் வழக்​கு​களும் உச்ச நீதி​மன்​றத்​தில் 88,251 வழக்​கு​களும் நிலு​வை​யில் உள்​ளன. இவ்​வாறு வழக்​கு​கள் நிலு​வை​யில் இருப்​ப​தற்கு 15 வகை​யான காரணங்​கள் இருப்​ப​தாக தேசிய நீதித்​துறை புள்ளி விவரம் (என்​ஜேடிஜி) தெரிவிக்​கிறது.

இதில், வழக்​கறிஞர் இல்​லாத​தால் 62 லட்​சம், குற்​றம்​சாட்​டப்​பட்ட நபர்​கள் தலைமறை​வான​தால் 35 லட்​சம், சாட்​சிகள் இல்​லாத​தால் 27 லட்​சம், மேல் நீதி​மன்​றங்​கள் விதித்த இடைக்​காலதடை காரண​மாக 23 லட்​சம், ஆவணங்​களுக்​காக காத்​திருப்​ப​தால் 14 லட்​சம், மனு​தா​ரர்​கள் ஆர்​வம் காட்​டாத​தால் 8 லட்​சம் என 1.78 கோடி வழக்​கு​கள் தாமத​மாகி வரு​கின்​றன.

உயர் நீதி​மன்​றங்​கள் மற்​றும் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்​கு​கள் தாமதம் ஆவதற்​கான காரணங்​கள் தெரிய​வில்​லை. அதி​கபட்​ச​மாக ஒரு வழக்கு 73 ஆண்​டு​களாக நிலு​வை​யில் உள்​ளது. இது 1952-ல் பதிவு செய்​யப்​பட்​டது ஆகும்.

இதுகுறித்து நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வில், “வழக்​கறிஞர்​கள் இல்​லாத​தால் விசா​ரணையை தள்ளி வைக்​கக் கூடாது என அனைத்து மாவட்ட நீதித் துறை அதி​காரி​களுக்​கும் உயர் நீதி​மன்​றங்​கள் சுற்​றறிக்கை அனுப்ப வேண்​டும்.

குற்​றம் சாட்​டப்​பட்​ட​வர்​களும் அவர்​களு​டைய வழக்​கறிஞர்​களும் சேர்ந்து விசா​ரணை நடவடிக்​கைகளை தாமதப்​படுத்​து​வது கண்​டறியப்​பட்​டால், ஜாமீனை ரத்து செய்​வது குறித்து நீதி​மன்​றங்​கள் பரிசீலிக்க வேண்​டும். ஒரு வழக்​கறிஞர் தாமதம் செய்​தால், தினசரி வி​சா​ரணையை உறுதி செய்ய நீதி​மன்​றத்​துக்​கு உதவ ஒரு​வரை நியமிக்​கலாம்​’’ என கூறப்​பட்​டுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here