செந்தில் பாலாஜி மீது சந்தேகம்: தவெக வழக்கறிஞர் குற்றச்சாட்டு

0
20

தவெக வழக்​கறிஞர் அறிவழகன் மதுரை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: தவெக தலை​வர் விஜய் கரூரில் பிரச்​சா​ரம் மேற்​கொண்​ட​போது போலீ​ஸார் போக்​கு​வரத்தை சீர்​செய்​ய​வில்​லை. பாது​காப்​புக்கு போது​மான காவலர்​களை நியமிக்​க​வும் இல்​லை. கரூர் கூட்​டத்​தில் போலீ​ஸார் குழப்​பத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளனர்.

திமுக முன்​னாள் அமைச்​சர் செந்​தில்​ பாலாஜி சதி​யால் 41 பேர் உயி​ரிழந்​தனர். அதற்​கான ஆதா​ரங்​களை நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​வோம். உயர் நீதி​மன்​றம் அனு​மதி அளித்​தால், பாதிக்​கப்​பட்ட குடும்​பங்​களை சந்​தித்து ஆறு​தல் கூற விஜய் தயா​ராக உள்​ளார். ஒரு நபர் விசா​ரணை ஆணை​யம் என்​பது பாதிக்​கப்​பட்ட மக்​களின் பிரச்​சினை​களை கேட்​கும். புலன் விசா​ரணை நடத்த முடி​யாது.

கூட்​டத்​தில் செந்​தில்​ பாலாஜி குறித்து பேசிய உடன் விஜய் மீது செருப்பு வீசப்​பட்​டது. அதன் பிறகே நெரிசல் ஏற்​பட்​டுள்​ளது. இந்த சம்​பவம் தொடர்​பாக போலீ​ஸார் அளிக்​கும் விளக்​கம், பொறுப்பை தட்​டிக்​கழிப்​ப​தாக உள்​ளது.

தவெக​வினர் போலீ​ஸாரின் நிபந்​தனை​களை மீற​வில்​லை. நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தவர்​களின் உடல்​களை இரவிலேயே உடற்கூராய்வு செய்​தது ஏன்? மருத்​து​வ​மனை​யில் ஏற்​க​னவே இறந்​தவர்​களின் உடல்​களும், இறந்​தவர்​களின் பட்​டியலில் சேர்க்கப்பட்​டுள்​ளதா என்ற சந்​தேக​மும்​ உள்​ளது. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here