தர்மஸ்தலா வழக்கில் திருப்பம்: பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தியதாக புகார்தாரர் சின்னையா வாக்குமூலம்

0
30

 தர்​மஸ்​தலா வழக்​கில் கைது செய்​யப்​பட்ட புகார்​தா​ரர் சின்​னையா நீதி​மன்​றத்​தில் வாக்​குமூலம் அளித்​துள்​ளார். கர்​நாட​கா​வின் தட்​சிண கன்னட மாவட்​டம், தர்​மஸ்​தலா​வில் புகழ்​பெற்ற மஞ்​சு​நாதா கோயில் உள்​ளது. அங்கு கடந்த 1995 முதல் 2014 வரை தூய்​மைப் பணி​யாள​ராக வேலை செய்த சின்​னையா கடந்த ஜூனில் தர்​மஸ்​தாலா காவல் நிலை​யத்​தில் புகார் மனுவை அளித்​தார்.

அதில், “மஞ்​சு​நாதா கோயி​லில் சுமார் 50-க்​கும் மேற்​பட்ட பெண்​கள், சிறுமிகள் பாலியல் வன்​கொடுமைக்கு ஆளாக்​கப்​பட்டு படு​கொலை செய்​யப்​பட்​டனர். அவர்​களின் உடல்​களை நான் புதைத்​தேன்’’ என்று தெரி​வித்​தார்.

இதுதொடர்​பாக சிறப்பு விசா​ரணைக் குழு அமைக்​கப்​பட்​டது. இந்த குழு நடத்​திய விசா​ரணை, சோதனை​யில் சின்​னையா பொய் புகார் அளித்​திருப்​பது தெரிய​வந்​தது. இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் கைது செய்​யப்​பட்​டார். இந்த சூழலில் கர்​நாட​கா​வின் பெள்​தங்​கடி நகர நீதி​மன்​றத்​தில் நீதிப​தி​கள் முன்​னிலை​யில் சின்​னையா நேற்று முன்​தினம் வாக்​குமூலம் அளித்தார்.

இதுகுறித்து போலீஸ் வட்​டாரங்​கள் கூறும்​போது, “தர்​மஸ்​தலா மஞ்​சு​நாதா கோயில் நிர்​வாகம் மீது பொய் புகார்​களை அளிக்க சின்​னை​யாவை சிலர் தூண்டி உள்​ளனர். இதன்​பேரில் அவர் பொய்​யான குற்​றச்​சாட்​டு​களை சுமத்தி உள்​ளார். இதை நீதிப​தி​கள் முன்​னிலை​யில் அவர் ஒப்​புக் கொண்டு வாக்​குமூலம் அளித்​துள்​ளார்.

யாருடைய தூண்​டு​தலின்​பேரில் சின்​னையா பொய் புகார்​களை கூறி​னார் என்​பதை இப்​போதைக்கு பகிரங்​க​மாக கூற முடியாது’’ என்று தெரி​வித்​தன. கர்​நாடக துணை முதல்​வர் சிவகு​மார் கூறும்​போது, “தர்​மஸ்​தலா வழக்​கில் உண்மை என்ன என்​பதை மக்​களுக்கு தெரியப்​படுத்தி வரு​கிறோம். இந்த வழக்​கின் இறுதி அறிக்​கைக்​காக காத்​திருக்​கிறோம்.

இதுதொடர்​பாக முதல்​வர் அல்​லது உள்​துறை அமைச்​சர் அதி​காரப்​பூர்வ தகவலை வெளி​யிடு​வார்​கள்’’ என்று தெரி​வித்​தார். மஞ்​சு​நாதா கோயி​லின் நிர்​வாக அதி​காரி வீரேந்​திர ஹெக்டே கூறும்​போது, “சிறப்பு வி​சா​ரணை குழுவை அமைத்த கர்​நாடக அரசுக்கு நன்​றி. இதன்​காரண​மாகவே உண்மை வெளிச்​சத்​துக்​கு வரு​கிறது’’ என்​று தெரிவித்​தார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here