மழையால் பாதித்த மகாராஷ்டிரா விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவ ராகுல் காந்தி வேண்டுகோள்

0
32

 ம​கா​ராஷ்டிராவில் சமீபத்தில் பெய்த கனமழை காரண​மாக பாதிக்​கப்​பட்ட மராத்​வாடா பகுதி விவ​சா​யிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்​டும் என மக்​களவை எதிர்க்கட்சித் தலை​வர் ராகுல் காந்தி வேண்டு​கோள் விடுத்​துள்​ளார். மகா​ராஷ்டி​ரா​வில் சமீபத்​தில் பெய்த கனமழை காரண​மாக மராத்​வாடா பகு​தி​யில் உள்ள 8 மாவட்​டங்​கள் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டன. மழை பாதிப்​பால் 8 பேர் உயி​ரிழந்​தனர். பல கிராமங்​கள் வெள்ள நீரில் மூழ்​கின. அங்கு 30,000 ஹெக்​டேர் நிலத்​தில் பயி​ரிடப்​பட்ட பயிர்​கள் நாச​மா​யின.

இந்​நிலை​யில் ராகுல் காந்தி எக்ஸ் தளத்​தில் விடுத்​துள்ள வேண்​டு​கோளில் கூறி​யிருப்​ப​தாவது: மகா​ராஷ்டி​ரா​வின் மராத்​வாடா பகு​தி​யில் சமீபத்​தில் பெய்த கன மழை காரண​மாக ஏற்​பட்ட உயி​ரிழப்பு மற்​றும் பயிர் சேதம் பற்​றிய செய்​தி​கள் மிக​வும் கவலையளிக்கின்​றன.

பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினருக்கு எனது இரங்​கல்​கள். இங்கு மத்​திய, மாநில அரசுகள் நிவாரண பணி​களை விரைந்து மேற்​கொண்டு, பாதிக்​கப்​பட்ட விவ​சா​யிகளுக்கு தேவை​யான உதவித் தொகையை வழங்க வேண்​டும். இங்​குள்ள காங்​கிரஸ் தலைவர்கள், தொண்​டர்​கள் அரசு நிர்​வாகத்​தினருடன் ஒத்​துழைப்​புடன் செயல்​பட்​டு, பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு உதவ வேண்​டும். இவ்​வாறு அவர்​ கூறி​யுள்​ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here