உள்ளடி வேலை செஞ்சா ஓரங்கட்டிருவோம் பாத்துக்கோங்க..! – ஏலகிரியில் எ.வ.வேலு அடித்த எச்சரிக்கை மணி!

0
46

“உங்களுக்குள்ள இருக்கிற பிரச்சினைகள மனசுல வச்சிக்கிட்டு ஒழுங்கா தேர்தல் வேலை பார்க்காம உள்குத்து வேலை செஞ்சு அதனால தொகுதி கைவிட்டுப் போச்சுன்னா உங்க யாருக்கும் பதவி மிஞ்சாது பாத்துக்கோங்க” ஏலகிரி மலையில் நடந்த திமுக ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு தான் கழக கண்மணிகளுக்கு இப்படி கண்டிப்பு மணி அடித்திருக்கிறார்.

‘வெல்​வோம் 200… படைப்​போம் வரலாறு’ என சூளுரைத்​துக் கிளம்பி இருக்​கும் திமுக, தேர்​தல் ஓட்​டப் பந்​த​யத்​தில் மற்ற கட்​சிகளை​விட சற்று வேக​மாகவே ஓடிக்கொண்​டிருக்​கிறது. அரசின் திட்​டங்​களைச் சொல்லி மக்​களுக்கு நெருக்​க​மாகி வரும் அதேவேளை​யில், தமி​ழ​கத்தை 8 மண்​டலங்​களாகப் பிரித்து முக்​கிய அமைச்​சர்​களை அதன் பொறுப்​பாளர்​களாக நியமித்​தும் தேர்​தல் வேலை​களை முடுக்கி விட்​டிருக்​கிறது திமுக தலை​மை. மண்​டலப் பொறுப்​பாளர்​களாக நியமிக்​கப்​பட்​டுள்ள அமைச்​சர்​களுக்கு சராசரி​யாக 30 தொகு​தி​கள் ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. தங்​களின் தலைக்​கும் கத்தி இருக்​கிறது என்​ப​தால், தங்​களுக்கு ஒதுக்​கப்​பட்ட தொகு​தி​களில் மண்​டலப் பொறுப்​பாளர்​கள் பம்​பர​மாய் சுற்​றிச் சுழன்று வரு​கி​றார்​கள்.

அந்த வகை​யில், வடக்கு மண்டல தேர்​தல் பொறுப்​பாள​ராக நியமிக்​கப்​பட்​டுள்ள அமைச்​சர் எ.வ.வேலு​வின் கவனிப்​பில் 41 தொகு​தி​கள் வரு​கின்​றன. இதில் பெரு​வாரி​யான தொகு​தி​களை வென்​றெடுத்து தலை​மை​யிடம் தனது செல்​வாக்கை நிலை நிறுத்​திக் கொள்ள வேண்​டும் என துடிக்​கும் வேலு, அதற்​காக எக்​ஸ்ட்ரா டைம் போட்டு வேலை செய்​வ​தாகச் சொல்​கி​றார்​கள்.

அதி​லும், மூத்த அமைச்​சரும் திமுக பொதுச்​செய​லா​ள​ரு​மான துரை​முரு​க​னின் காட்​பாடி மற்​றும் ஜோலார்​பேட்டை தொகு​தி​களை மீண்​டும் தக்கவைக்க வேண்​டும் என்​ப​தி​லும் கடந்த முறை கைவிட்​டுப் போன ஆரணி தொகு​தியை இம்​முறை கையகப்​படுத்த வேண்​டும் என்​ப​தி​லும் எ.வ.வேலு கருத்​தாய் இருப்​ப​தாகச் சொல்​கி​றார்​கள்.

இந்த நிலை​யில், திருப்​பத்​தூர் மாவட்ட திமுக-வுக்​குள் அரசல் புரசலாக உட்​கட்சி புகைச்​சல் இருப்​பதை உள்​வாங்​கிய வேலு, மாவட்ட திமுக-​வினரை அண்​மை​யில் ஏலகிரி மலைக்கு அழைத்து எச்​சரிக்கை மணி அடித்​திருக்​கி​றார். திருப்​பத்​தூர், ஜோலார்​பேட்​டை, வாணி​யம்​பாடி, ஆம்​பூர் தொகுதி நிர்​வாகி​களை ஏலகிரி மலைக்கு அழைத்த எ.வ.வேலு, அவர்​களில் குறிப்​பிட்ட சிலரை தனித் தனி​யாக அழைத்​தும் பேசி இருக்​கி​றார். அப்​போது, கட்​சிக்​குள் இருக்​கும் உட்​பூசல்​களை​யும் எடுத்​துச் சொல்லி சம்​பந்​தப்​பட்​ட​வர்களுக்கு சத்​தமில்​லாமல் குட்​டு​வைத்​திருக்​கி​றார் வேலு.

இது குறித்து, அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் சிலர் நம்மிடம் பேசுகையில், “அந்தக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் சிலர் தங்களின் மனக்கசப்புகளையும் அமைச்சரிடம் சொன்னார்கள். அதற்கு அவர், ‘அதையெல்லாம் உங்களுக்குள்ளேயே நீங்கள் தான் பேசி சரிசெய்து கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு, கமிஷன் வரல… மரியாத தரல… போஸ்டர்ல என் பேரப் போடல… இவன் கிள்ளிட்டான்… அவன் கொட்டிட்டான்னு ஸ்கூல் பசங்க கணக்கா பேசிக்கிட்டு இருக்கக்கூடாது.

கட்சி தொண்டர்களையும், கிளைச் செயலாளர்களையும் நேரில் அழைத்துப் பேசி அவர்களுக்கு தேவையானதை செஞ்சு கொடுக்கணும். எந்த எடத்துல எப்படி வேலை செய்யணும்… என்ன செஞ்சா ஓட்டு வாங்கலாம்னு நீங்களே கலந்து பேசி எனக்கிட்ட சொன்னீங்கன்னா ஆகவேண்டியதைப் பார்க்கலாம்.

எம்பி தேர்​தலில் எந்த பூத்​தில் எல்​லாம் கம்​மி​யான வாக்​கு​கள் பதி​வானதோ அங்​கெல்​லாம் இந்த முறை லீடிங் காட்​ட​ணும். தலைமை யாருக்கு சீட் கொடுக்​கிறதோ அதை ஏத்​துக்​கிட்டு மத்​தவங்க அவங்​களுக்கு வேலை பார்க்​கணும். கூட்​ட​ணிக் கட்​சிக்கு ஒதுக்​கி​னாலும் ஏத்​துக்​கிட​ணும். நமக்கு சீட் கிடைக்​கலை​யேங்​கிற ஆதங்​கத்​துல உள்​குத்து வேலை பார்க்​காம, கட்சி ஜெயிக்​கணும்; திமுக மீண்​டும் ஆட்​சிக்கு வரணும்னு நெனச்சு ஒவ்​வொருத்​தரும் வேலை பார்க்​கணும்.

நான் சொன்​னதை எல்​லாம் கேக்​காம விட்டு எந்​தத் தொகு​தி​யாச்​சும் கைவிட்​டுப் போச்​சுன்​னா, அப்​புறம் இங்க இருக்​கவங்​களுக்கு எல்​லாம் ஒன்​றியப் பதவி​யும் இருக்​காது, நகரப் பதவி​யும் இருக்​காது. கட்​சித் தலைமை கண்​டிப்​பான நடவடிக்கை எடுத்து எல்​லாரை​யும் ஓரங்​கட்​டிடும்​’னு சொன்​னார். அமைச்​சர் இப்​படி வெளிப்​படையா பேசுனதுல சிலருக்கு வருத்​தம் தான்.

அதேசம​யம். பெரு​வாரி​யான நிர்​வாகி​களோட மனசுல, கட்​சிக்​காக வேலை செய்​யாதவங்​களை​யும் கட்​சிக்கு துரோகம் செய்​யுறவங்​களை​யும் தயவு தாட்​சண்​யம் பார்க்​காம ஜெயலலிதா பாணி​யில் ஓரங்​கட்​டி​னால் தான் எல்​லாருக்​கும் பயம் வரும் என்ற எண்​ணம் தான் இப்ப மேலோங்கி நிற்​கிறது” என்​ற​னர். உள்​குத்து பார்ட்​டிகளை அமைச்​சர் எ.வ.வேலு சொல்​வது போல் உண்​மை​யிலேயே ஓரங்​கட்​டுமா திமுக தலைமை?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here