துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

0
108

அமைச்​சர் துரை​முரு​கன் மற்​றும் அவரது மனை​விக்கு எதி​ரான சொத்​துக் குவிப்பு வழக்​கின் மறு​ வி​சா​ரணைக்கு இடைக்​காலத் தடை விதித்​துள்ள உச்ச நீதி​மன்​றம், இந்த மேல்​முறை​யீட்டு வழக்​கில் தமிழக அரசு பதில் அளிக்​க​வும் உத்தரவிட்டுள்​ளது. தமிழக நீர்​வளத் துறை அமைச்​சர் துரை​முரு​கன் கடந்த 2006-11 திமுக ஆட்​சி​யில் பொதுப்​பணித் துறை அமைச்​ச​ராக இருந்​தார்.

அப்​போது, 2007-09 கால​கட்​டத்​தில் வரு​மானத்​துக்குஅதி​க​மாக ரூ.1.40 கோடி அளவுக்கு சொத்​துக் குவிப்​பில் ஈடு​பட்​ட​தாக துரை​முரு​கன், அவரது மனைவி சாந்​தகு​மாரி மீது வேலூர் லஞ்ச ஒழிப்​புத் துறை போலீ​ஸார் கடந்த 2011-ம் ஆண்டு அதி​முக ஆட்​சி​யில் வழக்கு பதிவு செய்​தனர். இந்த வழக்​கில் இருந்து இரு​வரை​யும் விடு​வித்து வேலூர் முதன்மை அமர்வு நீதி​மன்​றம் கடந்த 2017-ம் ஆண்டு உத்​தர​விட்​டது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் லஞ்ச ஒழிப்​புத் துறை மேல்​முறை​யீடு செய்​தது. இந்த வழக்கை விசா​ரித்த நீதிபதி பி.வேல்​முரு​கன், ‘‘அமைச்​சர் துரை​முரு​கன், அவரது மனைவி சாந்​தகு​மாரியை விடு​வித்து வேலூர் சிறப்பு நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவு ரத்து செய்​யப்​படு​கிறது. இந்த வழக்கை தினந்​தோறும் என்ற அடிப்​படை​யில் மீண்​டும் மறு​வி​சா​ரணை நடத்தி 6 மாதங்​களுக்​குள் விசா​ரித்து முடிக்க வேண்​டும்’’ என்று கடந்த ஏப்​ரலில் உத்​தர​விட்​டார்.

இதை எதிர்த்து இரு​வரும் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​தனர். நீதிப​தி​கள் தீபாங்​கர் தத்​தா, அகஸ்​டின் ஜார்ஜ் மாஸி அமர்​வில் இந்த வழக்கு நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது, மனு​தா​ரர் தரப்​பில் மூத்த வழக்​கறிஞர்​கள் முகுல் ரோஹ்தகி, பி.​வில்​சன் ஆகியோர் வாதிட்​ட​தாவது: கடந்த 33 ஆண்​டு​களாக தனி​யாக வணி​கம் செய்து வரும் சாந்​தகு​மாரி, ஆண்​டு​தோறும் முறை​யாக வரு​மான வரி செலுத்தி வரு​கிறார். இந்த நிலை​யில், இரு​வரது வரு​மானத்​தை​யும் லஞ்ச ஒழிப்​புத் துறை​யினர் ஒன்​றாக கணக்​கிட்​டு, சொத்​துக் குவிப்​பில் ஈடு​பட்​ட​தாக குற்​றம்​சாட்​டி​யுள்​ளனர்.

இது ஏற்​புடையது அல்ல. இது அரசி​யல் உள்​நோக்​கம் கொண்​டது. மேலும், அமைச்​சர் என்ற முறை​யில் துரை​முரு​கன் மீது வழக்கு பதிவு செய்​ய​வும், குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​ய​வும் ஆளுநரிடம்​தான் அனு​மதி பெற்​றிருக்க வேண்​டும். ஆனால், சட்​டப்​பேரவை தலை​வரிடம் அனு​மதி பெற்​றுள்​ளனர்.

இதை எல்​லாம் கருத்​தில் கொண்​டு​தான் வழக்​கில் இருந்து இரு​வரை​யும் வேலூர் சிறப்பு நீதி​மன்​றம் விடு​வித்​தது. உயர் நீதி​மன்​றம் அந்த தீர்ப்பை ரத்து செய்​து, மறு​வி​சா​ரணைக்கு உத்​தர​விட்​டுள்​ளது. எனவே, உயர் நீதி​மன்ற உத்​தர​வுக்கு தடை விதிக்க வேண்​டும். இவ்​வாறு வாதிட்​டனர். இதையடுத்​து, துரை​முரு​கன், சாந்​தகு​மாரிக்கு எதி​ரான சொத்​துக் குவிப்பு வழக்​கின் மறு​வி​சா​ரணைக்கு நீதிப​தி​கள் இடைக்​காலத் தடை வி​தித்​தனர். தமிழக அரசு பதில்​ அளிக்​க​வும்​ உத்​தர​விட்​டுள்​ளனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here