படப்பிடிப்பில் ஜீப் கவிழ்ந்தது: ஜோஜு ஜார்ஜ் காயம்

0
55

பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், தமிழில், ‘ஜகமே தந்திரம்’, ‘பபூன்’, ‘தக் லைஃப்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் நடித்து வரும் படம், ‘வரவு’.

ஷாஜி கைலாஷ் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மூணாறு அருகே நடந்து வந்தது. ஜீப் ஓட்டிச் செல்வது போன்ற காட்சியை நேற்று முன்தினம் படமாக்கியபோது, எதிர்பாராதவிதமாக ஜீப் திடீரென கவிழ்ந்தது.

இதில் நடிகர்கள் ஜோஜுஜார்ஜ், தீபக் பரம்போல், ஸ்டன்ட் நடிகர் ஆகியோர் லேசான காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here