போக்சோ வழக்கில் புகார் அளிக்க காலவரம்பு இல்லை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

0
46

போக்சோ வழக்​கில் புகார் அளிக்க கால​வரம்பு நிர்​ண​யம் செய்​ய​வில்​லை. பல சந்​தர்ப்​பங்​களில் குற்​ற​வாளி குடும்ப உறுப்​பின​ராகவோ அல்​லது உறவினருக்கு தெரிந்த நபராகவோ இருப்​ப​தால் புகார் அளிக்க தயங்​கு​கின்​றனர் என்று உயர் நீதிமன்றம் தெரி​வித்​துள்​ளது. தென்​காசி​யைச் சேர்ந்​தவர் நீல​கண்​டன்.

ஒரு பெண் மற்​றும் அவரது 17 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்​த​தாக இவர் மீது போலீ​ஸார் 2 வழக்​கு​கள் பதிவு செய்​தனர். இந்த வழக்​கு​களை ரத்து செய்​யக் கோரி, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் நீல​கண்​டன் மனு தாக்​கல் செய்​தார். அதில், “உரிமை​யியல் பிரச்​சினை​யில் என் மீது பாலியல் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. எனவே, இரு வழக்​கு​களை​யும் ரத்து செய்​ய​வேண்​டும்” என்று தெரி​வித்​திருந்​தார்.

இந்த மனுவை நீதிபதி பி.பு​கழேந்தி விசா​ரித்​தார். மனு​தா​ரர் தரப்​பில், “2023-ல் நடந்​த​தாகக் கூறப்​படும் சம்​பவத்​துக்கு 2025-ல் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. தாமத​மாக வழக்​குப்பதிவு செய்​யப்​பட்​டதற்​கான விளக்​கம் ஏற்​கும்​படி​யாக இல்​லை. புகார் அளித்த சிறுமிக்கு 19 வயதாகிறது. இதனால், போக்சோ சட்​டத்​தில் வழக்​குப் பதிவு செய்ய முடி​யாது” எனத் தெரிவிக்​கப்​பட்​டது.

பின்​னர் நீதிபதி தனது உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: போக்சோ வழக்​கில் புகார் அளிப்​ப​தற்கு கால​வரம்பு நிர்​ண​யிக்​க​வில்​லை. பல சந்​தர்ப்​பங்​களில் குற்​ற​வாளி குடும்ப உறுப்​பினர், உறவினர் அல்​லது தெரிந்த நபராக இருப்​ப​தால், பெரும்​பாலும் குழந்​தைகளால் புகார் அளிக்க முடிய​வில்​லை. பாலியல் வழக்​கு​களில் பாதிக்​கப்​பட்​ட​வர் வாழ்க்கை முழு​வதும் பாலியல் தொல்​லை​யின் அதிர்ச்​சியை சுமக்க நேரிடு​கிறது.

புகார் அளிக்க துணிகின்றனர்: அந்த அதிர்ச்​சி​யில் இருந்து மீள்​வதற்​காக பாதிக்​கப்​பட்ட சிறுமிகள் பலர் மேஜ​ரானதும், தாங்​கள் குழந்​தைகளாக இருந்​த​போது சந்​தித்த பாலியல் துன்​புறுத்​தல் குறித்து புகார் அளிக்​கத் துணி​கின்​றனர். வயதுக்கு வந்த பெண், தான் மைன​ராக இருந்​த​போது தனக்கு எதி​ராக நடந்த பாலியல் வன்​முறை​களுக்​காக போக்சோ சட்​டத்​தில் புகார் அளிப்​பதை தடை செய்ய போக்சோ சட்​டத்​தில் எந்த விதி​யும் இல்​லை.

இந்த வழக்​கில் மனு​தா​ரருக்கு எதி​ரான பாலியல் குற்​றத்தை நிரூபிக்க போதிய ஆதா​ரங்​கள் நீதி​மன்​றத்​தின் முன் வைக்​கப்​பட்​டுள்​ளன. எனவே, வழக்கை ரத்து செய்ய விரும்​ப​வில்​லை. மனு தள்​ளு​படி செய்​யப்​படு​கிறது. அதே நேரத்​தில் புகாரை போலீ​ஸார் சரி​யாக விசா​ரிக்​க​வில்​லை. இதனால், இரு வழக்​கு​களும் தென்​காசி சிபிசிஐடி வி​சா​ரணைக்​கு மாற்​றப்​படு​கிறது. இவ்​வாறு நீதிப​தி உத்​தர​விட்​டுள்​ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here