விஜய் கூறியது தனிப்பட்ட கருத்து: பழனிசாமி விமர்சனம்

0
56

 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக-தவெக இடையே​தான் போட்டி என்று தவெக தலை​வர் விஜய் கூறியது அவரது தனிப்​பட்ட கருத்​து, மக்​களின் கருத்து அல்ல என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார்.

சேலம் மாவட்​டம் எடப்​பாடி​யில் நேற்று அதி​முக நகரம், ஒன்​றிய, பேரூர் கட்சி நிர்​வாகிளை சந்​தித்​துப் பேசிய அவர், கட்​சி​யினருடன் ஆலோ​சனை மேற்​கொண்​டார்.

பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறியது: 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக-தவெக இடையே​தான் போட்டி என்று தவெக தலை​வர் விஜய் பேசி​யது குறித்து கேட்​கிறீர்​கள். விஜய் கூறியது அவரது தனிப்​பட்ட கருத்​து, மக்​களின் கருத்து அல்ல.

பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் சேலத்​தில் என்னை சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது, தேர்​தல் சுற்​றுப்​பயணம் குறித்து மட்​டுமே என்​னுடன் ஆலோ​சித்​தார். இவ்​வாறு பழனி​சாமி கூறி​னார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here