கேண்டிடேட்ஸ் தொடருக்கு ஆர்.வைஷாலி தகுதி!

0
14

ஃபிடே கிராஸ் சுவிஸ் செஸ் தொடர் உஸ்​பெகிஸ்​தானின் சாமர்கண்ட் நகரில் நடை​பெற்​றது. இதன் 11-வது மற்​றும் கடைசி சுற்​றில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான ஆர்​.வைஷாலி, முன்​னாள் உலக சாம்​பிய​னான சீனா​வின் சோங்கி டானுடன் மோதி​னார்.

இந்த ஆட்​டம் டிரா​வில் முடிவடைந்​தது. இதன் மூலம் 8 புள்​ளி​கள் பெற்று முதலிடம் பிடித்த வைஷாலி, அடுத்த ஆண்டு நடை​பெற உள்ள மகளிர் கேண்​டிடேட்ஸ் தொடரில் விளை​யாட தகுதி பெற்​றார்.

இந்​தி​யா​வில் இருந்து திவ்யா தேஷ்​முக், கோனேரு ஹம்பி ஆகியோர் ஏற்​கெனவே கேண்​டிடேட்ஸ் தொடருக்கு தகுதி பெற்​றுள்ள நிலை​யில் தற்​போது 3-வது வீராங்​க​னை​யான ஆர்​.வைஷாலி​யும் தகுதி பெற்​றுள்​ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here