உலக குத்துச்சண்டை போட்டி: இந்திய வீராங்கனைகள் ஜாஸ்மின், மினாக் ஷிக்கு தங்கம்

0
13

உலக குத்​துச்​சண்டை போட்​டி​யின் மகளிர் 57 கிலோ பிரி​வில்​(ஃபெதர்​வெ​யிட்) இந்​திய வீராங்​கனை ஜாஸ்​மின் லம்​போரி​யா, 48 கிலோ பிரி​வில் மினாக் ஷி ஆகியோர் தங்​கம் வென்​றனர்.

இங்​கிலாந்​தின் லிவர்​பூல் நகரில் உலக குத்​துச்​சண்டை போட்டி நடை​பெற்று வரு​கிறது. நேற்று நடை​பெற்ற 57 கிலோபிரிவு போட்​டி​யில் இந்​தி​யா​வின் ஜாஸ்​மினும், போலந்​தின் ஜூலியா ஸ்செரெமெட்​டா​வும் மோதினர். இதில் ஜாஸ்​மின் லம்​போரியா 4-1 (30-27, 29-28, 30-27, 28-29, 29-28) என்ற கணக்​கில் போலந்து வீராங்​கனை ஜூலி​யாவை வீழ்த்​தி​னார். போலந்து வீராங்​கனை ஜூலி​யா, பாரிஸ் ஒலிம்​பிக்​கில் வெள்​ளிப் பதக்​கம் பெற்​றவர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

இதன்​மூலம் உலக குத்​துச்​சண்டை போட்​டி​யில் தங்​கம் வென்ற 9-வது இந்​திய வீராங்​கனை என்ற பெரு​மையை ஜாஸ்​மின் பெற்​றார். இதற்கு முன்பு இந்​திய வீராங்​க​னை​கள் மேரி கோம் (6 முறை தங்​கம்), நிகத் ஜரீன் (2 முறை), சரிதா தேவி, ஜென்​னி, லேகா, நிது கங்​காஸ், லாவ்​லினா போர்​கோஹெய்ன், சவிதா புரா (தலா ஒரு முறை) ஆகியோர் உலக குத்​துச்​சண்டை போட்​டி​யில் தங்​கம் வென்று உள்ளனர். தனது 3-வது உலக சாம்​பியன்​ஷிப் போட்​டி​யிலேயே 24 வயதான ஜாஸ்​மின் தங்​கம் வென்று சாதித்​துள்​ளார்.

48 கிலோ பிரிவு: மகளிர் 48 கிலோ பிரி​வில் இந்​திய வீராங்​கனை மினாக் ஷியும், கஜகஸ்​தான் வீராங்​கனை நஸிம் கியாஜாய்​பே​வும் மோதினர். இதில் மினாக் ஷி 4-1 என்ற கணக்​கில் நஸிமை வீழ்த்தி தங்​கத்​தைத் தட்​டிச் சென்​றார்.

நூபுருக்கு வெள்ளி: மற்​றொரு இந்​திய வீராங்​கனை நுாபுர் ஷியோரன் வெள்​ளிப் பதக்​கம் வென்​றார். 80 கிலோவுக்கு மேற்​பட்ட பிரி​வில் நூபுரும், போலந்து வீராங்​கனை அகதா காஸ்​மார்​ஸ்கா​வும் மோதினர். இதில் அகதா காஸ்​மார்​ஸ்கா 3-2 என்ற கணக்​கில் நூபுரை வீழ்த்தி தங்​கம் வென்​றார். இதையடுத்து நூபுருக்கு வெள்​ளிப் பதக்​கம் கிடைத்​தது.

மகளிர் 80 கிலோ பிரிவு போட்​டி​யில் மற்​றொரு இந்​திய வீராங்​கனை பூஜா வெண்​கலத்​தைக் கைப்​பற்​றி​னார். அரை இறு​தி​யில் பூஜா, இங்​கிலாந்து வீராங்​கனை எமிலி அஸ்​கித்​திடம் 1-4 என்ற கணக்​கில் தோல்வி அடைந்​தார். இதையடுத்து அவருக்கு வெண்​கலப் பதக்​கம் கிடைத்​தது. போட்​டி​யின்​ முடி​வில்​ இந்​தி​யா​வுக்​கு 4 பதக்​கங்​கள்​ கிடைத்​துள்​ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here