விஜய் தலைமையில் கூட்டணி அமையும்: டிடிவி.தினகரன் தகவல்

0
18

விஜய் தலை​மை​யில் தமிழகத்​தில் நிச்​ச​யம் ஒரு கூட்​டணி அமை​யும். அதில் அமமுக இணைவது குறித்து தற்​போது சொல்ல முடி​யாது என்று அமமுக பொதுச் செய​லா​ளர் டிடி​வி.​தினகரன் கூறி​னார்.

அரியலூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: பாஜக கூட்​ட​ணி​யில் முதல்​வர் வேட்​பாள​ராக பழனி​சாமி இருக்​கும்​போது, நாங்​கள் எப்​படி அந்த கூட்​ட​ணி​யில் இருக்க முடி​யும்? முதல்​வர் வேட்​பாள​ராக பழனி​சாமி இருக்​கக்​கூ​டாது என்​பது​தான் எங்​களது கோரிக்​கை. தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரத்​தில் ஏராள​மான இளைஞர்​கள், இளம் பெண்​கள், 40 வயதுக்கு உட்​பட்​ட​வர்​கள் திரண்​டிருந்​தனர்.

முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா பாணி​யில் விஜய் பேச​வில்​லை. பெரம்​பலூருக்கு விஜய் சென்​ற​போது நள்​ளிர​வாகி​விட்​ட​தால், அவர் அங்கு பிரச்​சா​ரம் செய்​ய​வில்​லை. தமிழகத்​தில் தவெக தலை​வர் விஜய் தலை​மை​யில் நிச்​சயம் ஒரு கூட்​டணி உரு​வாகும். அதில் அமமுக இணைவது குறித்து தற்​போது சொல்ல முடி​யாது.

விஜய் தலை​மை​யில் ஒரு கூட்​ட​ணி​யும், சீமான் தலை​மை​யில் ஒரு கூட்​ட​ணி​யும் நிச்​ச​யம் அமை​யும். தமிழகத்​தில் நான்கு முனை போட்டி நிச்​ச​யம் உண்​டு. இவ்​வாறு டிடி​வி.​தினகரன் தெரி​வித்​தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here