நாமக்கல் சிறுநீரக திருட்டு சம்பவத்தால் உறுப்பு மாற்று அறுவைசி கிச்சைக்கு அனுமதி வழங்குவதில் தாமதம்

0
30

நாமக்​கல் சிறுநீரக திருட்டு சம்​பவத்​தால் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்​சைக்கு அனு​மதி வழங்​கு​வ​தில் தாமதம் ஏற்​பட்​டுள்​ள​தாக உயர் நீதி​மன்​றத்​தில் தெரிவிக்​கப்​பட்​டது.

சிவகங்கை மாவட்​டத்தை சேர்ந்த பெண் ஒரு​வர், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: என் சிறுநீரகங்​கள் பழு​தான​தால், மாற்று சிறுநீரகங்​கள் பொருத்த அனு​மதி கோரி பல மாதங்​களுக்கு முன்பு விண்​ணப்​பித்​தேன். எனினும், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்​சைக்​கான குழு இது​வரை அனு​மதி வழங்​க​வில்​லை.

இதனால்என் உடல்​நிலை நாளுக்கு நாள் மோசமாகி வரு​கிறது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்​சைக்கு விரை​வில் அனு​மதி வழங்க உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது. இந்த மனு நீதிபதி ஜி.ஆர்​. சு​வாமி​நாதன் முன்​னிலை​யில் விசாரணைக்கு வந்​தது. மனு​தா​ரரின் வழக்​கறிஞர் வாதிடும்​போது, “தமிழகத்​தில் கடந்த 2 மாதங்​களாக சிறுநீரக திருட்டு விவ​காரம் விஸ்​வரூபம் எடுத்து உள்​ளது.

இதனால் மனு​தா​ரருக்கு சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்​சைக்கு ஒப்​புதல் வழங்​கு​வ​தில் தாமதம் ஏற்​பட்​டுள்​ளது. மனு​தா​ரரைப்​போல, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனு​மதி கோரிய வழக்​கில் 4 வாரங்​களில் அனு​மதி வழங்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

அதன்​படி மனு​தா​ரருக்கு விரை​வாக உறுப்பு மாற்று சிகிச்சை அளிக்க உத்​தர​விட வேண்​டும்” என்​றார். பின்​னர் நீதிப​தி, “மனு​தா​ரருக்கு 23 வயதாகிறது. அவரது 2 சிறுநீரகங்​களும் பழுதடைந்​துள்​ளன. இதனால் அவரது தாயாரிடம் இருந்து சிறுநீரகம் தான​மாகப் பெற்​றார். எதிர்​பா​ராத வகை​யில் அந்த சிறுநீரக​மும் பழு​தானது.

தற்​போது மனு​தா​ரர் டயாலிசிஸ் சிகிச்சை மூலம் உயிருடன் வாழ்​கிறார். தற்​போது மனு​தா​ரரின் தோழி ஒரு​வர் சிறுநீரக தானம் வழங்க முன்​வந்​துள்ளார். எனவே, மனு​தா​ரரின் விண்​ணப்​பம் மற்​றும் ஆவணங்​களை 8 வாரங்​களில் பரிசீலித்து, மதுரை அரசு ராஜாஜி மருத்​து​வ​மனை​யில் உள்ள சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்​கொள்ள அங்​கீ​காரம் வழங்​கும் குழு முடி​வெடுக்க வேண்​டும்” என உத்தர​விட்​டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here