செப்.22 முதல் அக்.1-ம் தேதி வரை ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு: பொதுமக்கள் பார்வையிடலாம்

0
42

 கிண்​டி​யில் உள்ள ஆளுநர் மாளி​கை​யில் ‘நவ​ராத்​திரி கொலு செப்​டம்​பர் 22 முதல் அக்​டோபர் 1-ம் தேதிவரை நடை​பெற உள்​ளது. இந்த கொலு கொண்​டாட்​டத்தை ஆளுநர் ஆர்​.என்​.ரவி தொடங்கி வைக்​கிறார்.

தின​மும் மாலை 4 முதல் 5 மணிவரை நடை​பெறும் வழி​பாடு நிகழ்ச்​சி​யிலும் மாலை 5 முதல் 6 மணி வரை நடை​பெறும் கலாச்​சார நிகழ்ச்சி​களிலும் தனி​நபர்​கள், பொது​மக்​கள் மற்​றும் மாணவ, மாணவி​கள் பார்​வை​யாளர்​களாக கலந்​து​கொள்​ளலாம்.

ஆர்​வ​முள்ள தனி​நபர்​கள், பொது​மக்​கள் மற்​றும் கல்வி நிறு​வனங்​கள் https://tnrajbhavantour.tn.gov.in/navaratri/ என்ற இணை​யதள இணைப்பை பயன்​படுத்தி செப். 20-ம் தேதிக்​குள் பதிவு செய்ய வேண்​டும். பதி​வில், தங்​கள் பெயர், வயது, பாலினம், முகவரி, கைப்​பேசி எண், மின்​னஞ்​சல் முகவரி, பார்​வை​யிட வரும் தேதி உள்​ளிட்ட விவரங்​கள் இருக்க வேண்​டும்.

‘முதலில் வரு​வோருக்கு முன்​னுரிமை’ என்ற அடிப்​படை​யில் தின​மும் அதி​கபட்​சம் 200 பார்​வை​யாளர்​களுக்கு அனு​மதி வழங்​கப்​படும். விண்​ணப்​ப​தா​ரர்​களுக்கு அவர்​களுக்​கான ஒதுக்​கப்​பட்​டுள்ள தேதி​யை​யும், நேரத்​தை​யும் உறு​திப்​படுத்​தும் மின்​னஞ்​சல் அனுப்​பப்​படும்.

பார்​வை​யாளர்​கள் தங்​களுக்கு ஒதுக்​கப்​பட்​டுள்ள நேரத்​துக்கு குறைந்​தது 30 நிமிடங்​களுக்கு முன்​ன​தாக, ஆளுநர் மாளிகை இரண்​டாம் (2) நுழை​வா​யில் வழி​யாக வந்​தடைய வேண்​டும். தங்​களுக்கு அனுப்​பப்​பட்ட உறு​திப்​படுத்​திய மின்​னஞ்​சலின் நகல் மற்​றும் அசல் புகைப்பட அடை​யாளச் சான்றை கொண்டு வர வேண்​டும்.

ஆர்​வ​முள்ள வெளி​நாட்​டினரும் ‘நவ​ராத்​திரி கொலு 2025’ கொண்​டாட்​டங்​களில் கலந்​து​ கொள்​ளலாம் அவர்​களின் அசல் பாஸ்​போர்ட் மட்​டுமே அடை​யாளச் சான்​றாக ஏற்​றுக்​கொள்​ளப்​படும்​. ஆளுநர் மாளிகை நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பில் இவ்வாறு​ கூறப்​பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here