என்டிஏ கூட்டணியில் சில வருத்தங்கள் இருந்தாலும் விரைவில் முடிவுக்கு வரும்: அண்ணாமலை கருத்து

0
32

தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் சில வருத்​தங்​கள் இருந்​தா​லும், அவை விரை​வில் முடிவுக்கு வரும் என்று பாஜக மாநில முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை கூறி​னார்.

மதுரை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு டிடி​வி.​தினகரன், ஓபிஎஸ் மீண்​டும் வர வேண்​டும், கூட்​ட​ணி​யில் தொடர வேண்​டும் என்று நான் தொடர்ந்து வலி​யுறுத்தி வரு​கிறேன். வருத்​தத்​தில் ஒரு முடிவை எடுத்​திருப்​பார்​கள். தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் சில வருத்​தங்​கள் இருந்​தா​லும், விரை​வில் அவை முடிவுக்கு வரும்.

அது​வரை இணைப்பு முயற்​சிகளை மேற்​கொள்​வோம். நாம் எப்​போதுமே பசும்​பொன் முத்​து​ராமலிங்​கத் தேவரை கடவுளாக கருதி வரு​கிறோம். அவருக்கு உரிய மரி​யாதையை கொடுக்​கிறோம். தியாகி இமானுவேல் சேகரன் விழாவுக்​கும் ஆண்​டு​தோறும் பாஜக தலை​வர்​கள் செல்​கின்​றனர். எங்​களைப் பொறுத்​தவரை, எதை​யும் சர்ச்​சை​யாக பார்ப்​ப​தில்​லை. எல்​லோரும் அவர​வர் கருத்தை சொல்​கின்​றனர்.

தமிழகத்​தில் பாஜகவை வழி நடத்​தும் நயி​னார் நாகேந்​திரன்​தான் எங்​களது தலை​வர். சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு இன்​னும் 7 மாதங்​கள் இருக்​கின்​றன. அதற்​குள் ஏன் அவசரப்பட வேண்​டும்? சகோ​தரர் விஜய் கட்சி தொடங்கி இருக்​கிறார். மதுரை மண்​ணில் அண்​மை​யில் மாநாடு நடத்தி முடித்​திருக்​கிறார்.

அவர் 24 மணி நேர​மும் அரசி​யல் களத்​தில் இருக்க வேண்​டும். தவெக தமிழகத்​தில் மாற்​றத்தை ஏற்​படுத்​தும் கட்சி என்று அவர்​கள் சொல்​கின்​றனர். சனிக்​கிழமை மட்​டும் நான் பிரச்​சா​ரத்​துக்கு வரு​வேன். ஞாயிற்​றுக்​கிழமை மட்​டும் மக்​களைப் பார்ப்​பேன். பிற நாட்​களில் பார்க்க மாட்​டேன் என்​பது புதி​தாக வந்​திருக்​கும் அரசி​யல் கட்​சிக்கு அழகல்ல. திமுக​வுக்கு தவெக​தான் எதிரி என்​கின்​றனர். இதை களத்​தில் காட்ட வேண்டும்.

மாற்​றத்​துக்​கான அறிகுறி… தமிழகத்​தில் அதி​முக ஒரு யாத்​திரை நடத்தி வரு​கிறது. பாஜக பூத் கமிட்டி கூட்​டங்​களை முடித்​து, மண்டல மாநாடு​களை நடத்​த​விருக்​கிறது. ஜான் பாண்​டியன் அண்​மை​யில் திண்​டுக்​கல்​லில் மாநாடு நடத்​தி​னார். இனி நடை​பெறும் பொதுக்​கூட்​டங்​களில் கட்​சித் தொண்​டர்​களை தாண்​டி, மக்​கள் ஆர்​வ​மாக பங்​கேற்​கும்​போது​தான் அரசி​யல் மாற்​றத்​துக்​கான அறிகுறி தெரி​யும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here