குழித்துறை நகராட்சியில் பிளம்பிங் ஊழியராகப் பணிபுரியும் பிரகாஷ் (29) என்பவர், சென்னித்தோட்டம் அரசு மது பார் அருகே பைக்கை நிறுத்த முயன்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த தேவகுமார் என்பவர் கத்தியால் குத்தி படுகாயப்படுத்தியுள்ளார். காயமடைந்த பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவகுமாரை கைது செய்துள்ளனர்.