சென்னையில் ஜன.11-ல் டிரையத்லான் போட்டி

0
48

ஐயன்​மேன் 5150 டிரை​யத்​லான் போட்​டி​யின் அறி​முக விழா சென்னை தேனாம்​பேட்​டை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற தமிழக துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் ‘ஐயன்​மேன் 5150 டிரை​யத்​லான் சென்​னை’ போட்டி குறித்த அறி​விப்பை வெளி​யிட்​டார்.

இந்த டிரை​யத்​லான் போட்டி வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி கிழக்கு கடற்கரை சாலை​யில் உள்ள எம்​ஜிஎம் பீச் ரிசார்ட்​டில் நடைபெறுகிறது. டிரை​யத்​லான் போட்​டி​யானது 1.5 கிலோ மீட்​டர் நீச்​சல், 40 கிலோ மீட்​டர் சைக்​கிளிங், 10 கிலோ மீட்​டர் ஓட்​டம் ஆகிய​வற்றை உள்​ளடக்​கிய​தாகும். இந்த போட்​டியை நடத்​து​வதற்​காக தமிழக அரசு ரூ.3 கோடியை ஒதுக்​கி​யுள்​ளது.

ஐயன்​மேன் அமைப்​புடன் இணைந்து இந்த போட்​டியை எஸ்​டிஏடி நடத்​துகிறது. ஆசிய அளவில் ஐயன்​மேன் டிரை​யத்​லான் போட்​டியை நடத்​தும் 3-வது நாடு இந்​தியா ஆகும். அதேவேளை​யில் உலகள​வில் 6-வது இடத்​தில் உள்​ளது. இந்த போட்​டி​யுடன் ஸ்பிரின்ட் டூயத்​லான், ஒலிம்​பிக் டூயத்​லான் போட்​டிகள் அறி​முகப்​படுத்​தப்​படு​கின்றன. இந்​தி​யா​வில்

டூயத்​லான் போட்டி அறி​முக​மாவது இதுவே முதன்​முறை​யாகும். டூயத்​லானில் நீச்​சல் பிரிவு மட்​டும் கிடை​யாது. அதற்கு பதிலாக இரு முறை ஓட்​டம் இருக்​கும். ஸ்பிரின்ட் டூயத்​லான் 5 கிலோ மீட்​டர் ஓட்​டம், 20 கிலோ மீட்​டர் சைக்​கிளிங், 2.5 கிலோ மீட்​டர் ஓட்​டம் ஆகிய​வற்றை உள்​ளடக்​கியது. ஒலிம்​பிக் டூயத்​லான் 10 கிலோ மீட்​டர் ஓட்​டம், 40 கிலோ மீட்​டர் சைக்​கிளிங், 5 கிலோ மீட்​டர் ஓட்​டம் ஆகிய​வற்றை உள்​ளடக்​கிய​தாகும்.

6 முதல் 16 வயதுக்கு உட்​பட்​ட​வர்​கள் கலந்து கொள்​ளும் வகை​யில் ‘ஐயன்​கிட்ஸ் சென்னை ரேஸ்’ போட்​டி​யும் நடத்​தப்பட உள்​ளது. ஒட்​டுமொத்​த​மாக இந்த போட்​டிகளில் வெளி​நாட்டு வீரர்​கள் உட்பட 500-க்​கும் மேற்​பட்​ட​வர்​கள் கலந்து கொள்​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. போட்​டிகளில் பங்​கேற்​ப​தற்கு இணை​யதளத்​தில் பதிவு செய்ய வேண்​டும். இதுதொடர்​பாக 2 வாரங்​களில் அறிவிக்​கப்​படும் என போட்டி அமைப்​பாளர்​கள் தெரி​வித்​தனர்.

முன்​ன​தாக போட்​டியை சிறப்​பாக நடத்​து​வது குறித்து தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யம் மற்​றும் ஐயன்​மேன் 5150 டிரை​யத்​லான் அமைப்​பினருக்​கிடையே புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டது. நிகழ்ச்​சி​யில் இளைஞர் நலன் மற்​றும் விளை​யாட்டு மேம்​பாட்​டுத்​துறை கூடு​தல் தலை​மைச் செய​லா​ளர் அதுல்ய மிஸ்​ரா, எஸ்​டிஏடி உறுப்​பினர் செயலர் மேக​நாத ரெட்​டி, ஐயன்​மேன் இந்​தி​யா​வின் தலை​வர் தீபக் ராஜ், போட்​டி​யின் துணை நடு​வர் ஆர்த்​தி சு​வாமி​நாதன்​ உள்​ளிட்​டோர்​ கலந்​து கொண்​டனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here