குளச்சல் கடல் பகுதியில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். நேற்று கரை திரும்பிய 20 விசைப்படகுகளில் கணவாய், தோட்டு கணவாய், ஆக்டோபஸ் போன்ற மீன்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன. கேரளாவில் ஓண பண்டிகை காரணமாக வியாபாரிகள் அதிக அளவில் மீன்களை வாங்கிச் சென்றதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.