திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த அன்வர் உசைன் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு செய்திருந்தார். நாகப்பட்டினம் செல்லும் போது நெஞ்சுவலி ஏற்பட்டு சிகிச்சை பெற்றார். மருத்துவச் செலவு ரூ. 61,372 ஆனது. ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனம் பணத்தை வழங்கவில்லை. இது குறித்து குமரி நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆணைய நீதிபதி கிளாட்சன், இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து, மருத்துவத் தொகையை 6.5% வட்டியுடன் வழங்க உத்தரவிட்டார்.