அமைச்சர் மெய்யநாதனை புறக்கணிக்கிறாரா அமைச்சர் ரகுபதி?

0
66

புதுக்கோட்டை மாவட்ட திமுக-வில் அமைச்சர்கள் ரகுபதியும் சிவ.வீ.மெய்யநாதனும் அசைக்கமுடியாத சக்தியாக இருப்பவர்கள். இதில், ரகுபதி புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருப்பதால் கூடுதல் அதிகாரத்துடன் கோலோச்சி வருகிறார். இதனால் அவரது மாவட்டத்துக்கு உட்பட்ட ஆலங்குடி தொகுதியின் எம்எல்ஏ-வான அமைச்சர் மெய்யநாதனை ரகுபதி தரப்பு திட்டமிட்டு புறக்கணித்து வருவதாகச் சொல்கிறார்கள்.

​மாவட்ட திமுக சார்​பில் நடத்​தப்​படும் நிகழ்ச்​சிகளில் மெய்​ய​நாதனின் பெயரும் படமும் திட்​ட​மிட்டு இருட்​டடிப்பு செய்​யப்​படு​வ​தாக நீண்ட கால​மாகவே புகைச்​சல் உண்​டு. சில மாதங்​களுக்கு முன்​பு, பட்​ஜெட்​டில் தமி​ழ​கத்​துக்கு போதிய நிதியை ஒதுக்​காத மத்​திய அரசைக் கண்​டித்து அறந்தாங்கி​யில் ஆர்ப்​பாட்​டம் நடத்​தி​யது திமுக. இதற்​காக முதலில் அச்​சடிக்​கப்​பட்ட போஸ்​டரில் அமைச்​சர் மெய்​ய​நாதன் படமோ பெயரோ இல்லை. அதன் பிறகு இதைச் சுட்​டிக்​காட்​டிய பிறகு மெய்​ய​நாதனின் படமும் பெயரும் போஸ்​டரில் சேர்க்​கப்​பட்​டது.

இதே​போல், ஜூலை மாதம் புதுக்​கோட்​டை​யில் தெற்கு மாவட்ட திமுக வாக்​குச்​சாவடி முகவர்​கள் கூட்​டம் நடந்​தது. அதற்​கான மேடை​யில் வைக்கப்​பட்ட ஃபிளெக்​ஸில் மெய்​ய​நாதனின் படத்தை போடா​மல் விட்​டார்​கள். இதைப் பார்த்​து​விட்டு அவரது ஆதர​வாளர்​கள் இருக்​கையை விட்டு எழுந்து சென்று மண்டல பொறுப்​பாள​ரும் அமைச்​சரு​மான கே.என்​.நேரு​விடம் உரிமைக் குரல் எழுப்​பினர். அப்​போது அவர்​களை சமாதனப்படுத்துவதற்​குள் பெரும்​பாடு பட்​டுப்​போ​னார் நேரு. “இனிமேல் இப்​படி நடக்​காமல் பார்த்​துக் கொள்​கிறேன்” என்று அவர் உத்​தர​வாதம் அளித்த பிறகே மெய்​ய​நாதன் விசு​வாசிகள் அமை​தி​யா​னார்​கள்.

ஆனாலும் நிலைமை மாற​வில்​லை. அண்​மை​யில் புதுக்​கோட்​டை​யில் திமுக சட்​டத்​துறை பயிற்சி பாசறைக் கூட்​டம் நடந்​தது. இதில் பங்​கேற்​றவர்​களுக்கு தரப்​பட்ட அடை​யாள அட்​டை​யில் ரகுபதி படம் மட்​டுமே இருந்​தது; மெய்​ய​நாதன் படம் இல்​லை. இதற்கு எதிர்ப்பு தெரி​வித்த மெய்​ய​நாதன் ஆதர​வாளர்​கள் சிலர், அடை​யாள அட்​டைகளை அணிந்​து​கொள்ள மறுத்து ஆட்​சேபனை செய்​தனர்.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய மெய்​ய​நாதனின் ஆதர​வாள​ரான தெற்கு மாவட்ட நிர்​வாகி ஒரு​வர், “கடந்த கால் நூற்​றாண்​டாக ஊராட்சி மன்​றத் தலைவர், ஒன்​றியக் கவுன்​சிலர், ஒன்​றியக் குழுத் தலை​வர், எம்​எல்ஏ என போட்​டி​யிடும் அனைத்​துத் தேர்​தல்​களி​லும் வெற்றி பெற்று வரு​கி​றார் மெய்​ய​நாதன். 2021 தேர்​தலில் மாவட்​டத்​திலேயே அதிக வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற ஒரே எம்​எல்ஏ மெய்​ய​நாதன் தான்.

கட்​சிப் பணி​யிலும் மக்​கள் சேவை​யிலும் அவருக்கு இணை​யாக யாரை​யும் இங்கு சொல்​ல​முடி​யாது. அப்​படிப்​பட்​ட​வரை ரகுபதி தரப்​பினர் ஏனோ தெரிய​வில்லை திட்​ட​மிட்டு புறக்​கணிக்க நினைக்​கி​றார்​கள். ரகுபதி சொல்லி இப்​படிச் செய்​கி​றார்​களா அல்​லது அவர் சந்​தோஷப்​படு​வார் என நினைத்து இவர்​களாகவே இப்​படிச் செய்​கி​றார்​களா என்​றும் தெரிய​வில்​லை.

இத்​தனைக்​கும் தெற்கு மாவட்​டத்​தில் தான் ரகுபதி மற்​றும் மெய்​ய​நாதனின் தொகு​தி​கள் வரு​கின்​றன. ஆனால், கட்​சிக் கூட்​டம் என்​றாலே தெற்கு மாவட்​டச் செய​லா​ள​ராக இருப்​ப​தால் ரகுப​தியை மட்​டுமே முன்​னிலைப்​படுத்​துகி​றார்​கள். வாக்​குச் சாவடி முகவர்​கள் கூட்​டத்​தில் அமைச்​சர் நேருவிடம் மெய்​ய​நாதனை புறக்​கணிப்​பது குறித்து காட்​ட​மாகவே கேள்வி கேட்​டோம். “இந்த பிரச்​சினை இனிமேல் வரா​து” என்​றார். ஆனால், மறுபடி​யும் அதையே செய்​திருக்​கி​றார்​கள்.

2016-ல் வெற்​றி​பெற்று எதிர்க்​கட்சி எம்​எல்​ஏ-​வாக இருந்​தவர் மெய்​ய​நாதன். 2021 தேர்​தலில் அவரை வேட்​பாளர் பரிசீலனைக்கு கொண்டு வரவே சிலருக்கு விருப்​பமில்​லை. கடைசி​யில், அமைச்​சர் நேரு பார்த்​து​விட்டு சம்​பந்​தப்​பட்​ட​வர்​களை கடிந்து கொண்​டதுடன் மெய்​ய​நாதனின் பெயரை​யும் உள்ளே கொண்டு வந்​தார்.

இத்​தனை நெருக்​கடிகளை​யும் தாண்டி தேர்​தலில் வென்று அமைச்​ச​ராகி மக்​கள் மத்​தி​யில் மெய்​ய​நாதன் பெயரெடுத்து வரு​வதை ஜீரணிக்க முடியாதவர்​கள் அவரை எப்​படி​யெல்​லாமோ இருட்​டடிப்பு செய்​கி​றார்​கள். சீப்பை எடுத்து மறைத்து வைத்​து​விட்​டால் கல்​யாணம் நின்று போய்விடுமா என்​ன?” என்​றார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here