சாலைகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பர தடுப்புகளை அகற்றக் கோரி வழக்கு: நெடுஞ்சாலை துறை பதில் அளிக்க உத்தரவு

0
69

தமிழகத்​தில் தேசிய, மாநில நெடுஞ்​சாலைகளில் தனி​யார் விளம்​பரங்​களு​டன் அமைக்​கப்​பட்​டுள்ள இரும்​புத் தடுப்​பு​களை (பேரி​கேட்) அகற்​றக் கோரிய வழக்​கில், மத்​திய, மாநில நெடுஞ்​சாலைத் துறை​கள் பதில் அளிக்​கு​மாறு உயர் நீதி​மன்​றம் உத்தர​விட்​டது.

கன்​னி​யாகுமரி மாவட்​டம் அகஸ்​தீஸ்​வரத்​தைச் சேர்ந்த அழகேசன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது:தமிழகத்​தில் கடந்த 10 ஆண்​டு​களில் வாக​னங்​களின் எண்​ணிக்கை பல மடங்கு பெருகி உள்​ளது. இதனால் ஏற்​படும் போக்​கு​வரத்து நெரிசலை சரிசெய்ய எந்த நடவடிக்​கை​யும் எடுக்​கப்​ப​டா​மல் உள்​ளது.

இரும்​புத் தடுப்​பு​கள்…. சாலைகளில் வாக​னங்​களின் வேகத்தை முறைப்​படுத்த உரிய இடங்​களில் இரும்​புத் தடுப்​பு​கள் வைக்​கப்​படு​வது வழக்​கம். இது அவசரக் காலங்​களில் போக்​கு​வரத்து மாற்​றத்​துக்​காக வைக்​கப்​படு​கிறது. அவ்​வாறு வைக்​கப்​படும் தடுப்​பு​களில் எந்த தனி​யார் விளம்​பரங்​களும் இடம்​பெறக் கூடாது. ஆனால் தமிழகத்​தில் சாலைகளில் வைக்​கப்​பட்​டுள்ள தடுப்​பு​களில் தனி​யார் விளம்​பரங்​கள் நிரம்​பி​யுள்​ளன.

2 வாரங்களுக்கு தள்ளிவைப்பு: இதனால் மாநில, தேசிய நெடுஞ்​சாலைகள் மற்​றும் பொது இடங்​களில் தனி​யார் விளம்​பரங்​களு​டன் வைக்​கப்​பட்​டுள்ள இரும்​புத் தடுப்​பு​களை அகற்​ற​வும், தமிழ்​நாடு உள்​ளாட்சி விதிப்​படி தடுப்​பு​களை சரி​யான அளவில் வைக்​க​வும், சாலைகளில் எதிரில் வரும் வாக​னங்​கள் தெரி​யும் வகை​யில் அவை இருப்​பதை உறு​திப்​படுத்​த​வும் உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனு நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​பிரமணி​யம், ஜி.அருள்​முரு​கன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. பின்​னர் நீதிப​தி​கள், மனு தொடர்​பாக மத்​திய, மாநில நெடுஞ்​சாலைத் துறை மற்​றும் தமிழக போக்​கு​வரத்​துத் துறை பதில் அளிக்க உத்​தர​விட்​டு, விசாரணையை 2 வாரங்​களுக்கு தள்​ளி​வைத்​தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here