“சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு!” – முதல்வர் ஸ்டாலின்

0
120

இன்று சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சென்னை நகரின் சிறப்பை போற்றும் வகையில் எக்ஸ் சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

“எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து, வாழ வழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்து, பல பெண்களுக்குப் பறக்கச் சிறகுகளை அளித்து, எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை அளித்து, சொந்த ஊரில் அடையாளத்தை அளித்து, மொத்தத்தில் நமக்கெல்லாம் வாழ்வளித்த சீரிளம் சென்னைக்கு அகவை 386!

சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு! வணக்கம் வாழவைக்கும் சென்னை!” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here